புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 28, 2020)

சாபக் கட்டுகளை உடைத்தெறிவோம்

1 யோவான் 5:4

தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.


தங்களது போதைவஸ்து அடிமைத்தனத்தினால் தங்கள் ஏழு பிள்ளை களின் வாழ்வை கடினமாக்கியவர்களிடம், ஏன் இப்படியாக செய்கி ன்றீர்கள் என்று ஒரு சமுக ஆலோசகர் கேட்டார்? அதற்கு நாங்கள் சிறு வர்களாக இருந்தபோது, அயலிலுள்ளவர்கள், மற்றும் பெரியவர்கள் என கருதப்பட்டவர்கள் எங்களை துஷ்பிரயோகம் செய்தார்கள். கேட்ப தற்கு யாரும் இருக்கவில்லை என்று தங்களுக்கு முன்னிருந்தவர்களை குற்றப்படுத்தினார்கள். அந்த ஏழு பிள் ளைகளில் சிலர் வளர்ந்த தங்கள் தவ றான நடக்கைகளுக்கு தங்கள் பெற் றோரை குற்றப்படுத்தலாம். கருப்பொருளாவது, 1. இந்த பூமி மனிதர்களு டைய பொல்லாத வழிகளினாலே தீட் டுப்படுகின்றது, 2. மனிதர்கள் எப் போதும் தங்கள் வாழ்க்கையை திருத் திக் கொள்வதற்கு பதிலாக, அவன் எனக்கு அடித்தான், அதனால் நான் எனக்கு பக்கத்திலிருக்கின்ற வேறொருவனுக்கு அடித்தேன் என்று குற்றங்களை மற்றவர்களிடம் சுமத்தி விடுகின்றார்கள். பிரியமா னவர்களே, இந்த குற்றம் சுமத்தும் துஷ்ட வாழ்க்கை வட்டம் (Vicious Life cycle – Blame Game) நிறுத்தப்படுவதற்கு நான் என்னை அர்ப்பணிக்க வேண்டும். என் முற்பிதாக்கள் தவறான வழியிலே வாழ்ந்திருக்கலாம் அல்லது என் வாழ்வை கெடுக்கும்படியான பல குழப்பங்களை வேறு பலர் செய்திருக்கலாம். எவை எப்படியாக இருந்தாலும், “நான் உன க்கு சமாதானமான வாழ்வை தருவேன்” என்ற இயேசு உன்னை அழைக்கின்றார். நமது வாழ்வில் பின்னடைவுகள் ஏற்படும்போது இந்த உலகத்தையும், அதன் குடிகளையும், அதன் போக்குகளையும் குற் றப்படுத்தாமல். உலகத்தை ஜெயித்த இயேசுவை நோக்கிப் பாரு ங்கள். தேவனுடைய நீதி வெளிப்படும் நாளுண்டு அந்நாளிலே அவன வன் தன் கிரியைகளுக்குரிய பலனை பெற்றுக் கொள்வான். அது அறுவடையின் நாள். மனிதன் எதை விதைத்தானோ அதை அறுத்துக் கொள்வான். தகப்பனுக்கும், மகனுக்கும், தாய்க்கும் மகளுக்கும் யாவருக்கும் நீதி சரிக்கட்டப்படும். எங்களுக்கு கொடுக்கப்பட்ட கிரு பையின் நாளை பிரயோஜனப்படுத்தி, இயேசுவின் நாமத்தில் சாபக் கட்டுகளை உடைத்தெறிவோம். ஜெயம் எடுப்போம். பாவக் கட்டுக்க ளில் சிக்கியிருக்கின்றவர்களின் விடுதலைக்காக ஊக்கமாக ஜெபம் செய்வோம்.

ஜெபம்:

அன்பின் பரலோக தந்தையே, உம்முடைய திருச்சமுகத்திலே இருக்கும் ஆனந்த பாக்கியமானது அளவிட முடியாது. நான் அதையே எப்போதும் நாடித் தேட என்னை உணர்வுள்ளவானா(ளா)க்கும். இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நாகூம் 1:12-13