புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 26, 2020)

இன்றே இரட்சணிய நாள்

சங்கீதம் 95:8

இன்று அவருடைய சத் தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்தில் கோபம் மூட்டினபோதும் சோத னை நாளிலும் நடந்தது போல, உங்கள் இருதய த்தைக் கடினப்படுத்தா தேயுங்கள்.


பல மாதங்களாக தங்கள் இளைய மகனின் போக்கை அவதானித்து வந்த பெற்றோர்கள், அவனுக்கு அவ்வப்போது அறிவுரைகளை தய வாக கூறிவந்தார்கள். அவனின் நண்பர்களையும் அவர்களுடைய வழி களையும் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படியாக அவனைக் கேட் டுக் கொண்டார்கள். சில கிழமைகள் கடந்தும் அவன் வழிகளிலே மாற் றங்கள் ஏதும் ஏற்படாததால், அவனு டைய நேரத்தை அவன் வீணாக்காமல், பிரயோஜனப்படுத்தும்படிக்கு உதைபந் தாட்ட பயிற்ச்சிக்காக அனுப்பி வைத்தா ர்கள். இப்படியாக பல முயற்ச்சிகளை செய்தும் அவை பலனளிக்காததால், அவனை கடிந்து கொண்டார்கள். ஒரு சமயம், விடுமுறை நாட்களிலே அவனை குறித்து வந்த குற்றச்சாட்டை கேட்ட மாத்திரத்திலே, “நீ இரண்டு கிழமைக ளுக்கு எங்கும் செல்ல முடியாது, கம் யூட்டர் பாவிக்க முடியாது, இன்ர நெற் இல்லை. வீட்டிலே தரித்திருந்து உன் வழிகளை குறித்து சிந்தனை செய் என்று சட்டம் போட்டார்கள்.” (you are grounded for two weeks without any electronic devices). பிரியமானவர்களே, தங்கள் சொந்த பிள்ளைக்கு ஏன் இந்த சிறைவாசம்? பெற்றோர் அவன்மேல் அன்பற்றவர்களாக நடக்கின்றார்களா? இல்லை! அவன் தன் வாழ்வை முற்றாக அழித்துக் கொள்ளும் நாள் வருமுன், அவன் தன் சிறு பிராயத்திலே தன் மதியீனத்திலிருந்து விடுதலையாக வேண் டும் என்பதே அந்த வீட்டு மறியலின் நோக்கம். இதே போலவே எங் கள் பரம பிதாவும் எங்களை வழிநடத் துகின்றார். தம்முடைய ஜனங் கள், பாவமான வழிகளை தெரிந்து கொள்ளும் போது மனவேதனை யடைகின்றார். (ஏசாயா 1:3). யாவரும் மனந்திரும்பும்படியாக நீடிய பொறுமையுள்ளவராக இருக்கின்றார். (2 பேது 3:9). கண்டித்து, தண் டிக்கின்றார் (எபி 12:6). தங்கள் துன்மார்க்க வழி களால், தங்களையும், மீதியாக இருக்கும் மற்றவர்களையும் அவர்கள் முற்றாக கெடுத்துப் போடாமல் இருக்கும்படிக்கு, தம் ஜனங்கள் உணர்வடைவார்கள் என்று எண்ணி சிறையிருப்பை அனுமதிக்கின்றார். (சங் 137). இன்று நீங்கள் எப்படிப்பட்ட கடுமையான சூழ்நிலையிலிருந்தாலும், இயேசு உங்களை நேசிக்கின்றார். உங்கள் வாழ்வை அவரிடம் ஒப்புக் கொடுங்கள். அப் போது உங்கள் ஆத்துமாவை காத்துக் கொள்வீர்கள்.

ஜெபம்:

அன்புள்ள தேவனே, என் இருயத்தைக் கடினப்படுத்தி என் ஆத்துமாவை கெடுத்துக் கொள்ளாமல், இன்று உம்முடைய சத்தத்திற்கு நான் செவி கொடுத்து மனந்திரும்ப என்னை உணர்வுள்ளவனா(ளா) க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 1:16-20