புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 25, 2020)

எங்கள் வாழ்வின் வழிகாட்டி...

சங்கீதம் 119:105

உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.


ஒரு ஊரிலுள்ள சிலர், காடும் வனாந்திரமுமான பாதைகளைக் கடந்து அடுத்த ஊருக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்தக் கூட்டத்தில் இருந்த பலருக்கு அதைக் குறித்த முன் அனுபவம் ஏது மில்லை. குழுவாக செல்வதால், தங்கள் பிரயாணம் பரவசம் நிறை ந்ததாக இருக்கும் என்று பலர் சொல்லிக் கொண்டார்கள். அதை கேட்டுக் கொண்டிருந்த அனுபவமிக்க மனிதன் அவர்கள் எண்ணத்தை உடன டியாக உடைத்து அவர்களை சோரப் பண்ண விரும்பவில்லை. எனினும், இது பிரயாணத்தின் ஆரம்பம். பிரயா ணம் நீண்ட தூரம், அதில் சவால்கள் பல இருக்கும். முடிவை காண நாட் கள் உண்டு என்று அவர்களுக்கு கூறி னார். ஊரிலுள்ள பலவிதமான கனித ரும் மரங்கள் பல்வேறு சூழலிலே வளர்ந்து வருகின்ற போது, அவை யாவும் பார்வைக்கு பச்சைப்பசேல் என்று கண்களுக்கு இதமாக இருக்கும். வசந்த கால த்திலே மரங்களிலே தோன்றும் மலர்கள் பார்வைக்கு அழகாகவும் பசுமையாகவும் இருக்கும். மலர்ந்த மலர்கள் பிஞ்சாகி, காயாகி, முத்தி பழமாகும் போது அந்த மரத்தின் கனியின் சுவை அறியப்படும். வாலிபமும் இளவயதும் மனித வாழ்வின் வசந்த காலம் என்று மனிதர்கள் ஒப்பனையாக கூறிக் கொள்வார்கள். சில வேளைகளிலே எங்களுடைய வாழ்வின் ஆரம்பம் அல்லது எங்கள் பிள்ளைகளுடைய வாழ்வின் ஆரம்பம் யாவும் வசந்த காலம் போல அருமையாக தோன்றலாம். வளர்ச்சியின் அந்தப் பகுதி முடிவு அல்ல. அது எங்கள் வாழ்க்கைப் பிரயாணத்தின் ஒரு பகுதி. குளிர்ந்த தண்ணீர் ஊற்றுக்களை கண்டு அதன் அருகே தரித்து நின்றுவிடாதிரு ங்கள். அதாவது, வாழ்க்கையில் ஏற்படும் சில நன்மையான மாற்ற ங்களை கண்டு, யாவும் நிறைவு பெற்றது என்று எண்ணங் கொள் ளாதிருங்கள். பரலோக யாத்திரிகளாக சென்று கொண்டிருக்கும் எங் கள் வாழ்க்கையின் பாதையிலே, பசுமையும் குளிச்சியுமான வழிகள் வந்தாலும் அல்லது கானகப் பாதையைப் போல காடும் மலையுமான ஆண்டுகளை கடக்க வேண்டியிருந்தாலும், கர்த்தரோடு நடக்க பழகிக் கொள்ளுங்கள். அதாவது, கர்த்தருடைய வார்த்தையின் வெளிச்சத்தில் வாழ வேண்டும். தொடக்கத்திலிருந்து முடிவு வரைக்கும் எங்கள் சுயபுத்தியின் மேலும், சுயபெலத்தின் மேலும் சாய்ந்து கொள்ளாமல் அவருடைய வார்த்தையின்படி வாழ்வோமாக.

ஜெபம்:

பரலோக தேவனே, அநித்தியமான உலக சந்தோஷங்களை நோக்கி வாழாமல், நீர் எங்களோடு இருக்கும் பாக்கியத்தை உணர்ந்தவ ர்களாக வாழும்படி எங்களுக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 84:5-7