புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 24, 2020)

என்னுடைய பெலன் எங்கே உண்டு?

ஏசாயா 40:29

சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருக ப்பண்ணுகிறார்.


என் வழி கர்த்தருக்கு மறைவாயிற்று என்றும், என் நியாயம் என் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது என்றும் சொல்லும் பெலவீனமான நாட்கள், ஏசாயா தீர்க்கதரிசியின் நாட்களில் மட்டுமல்ல, இன்றும் மனிதர்களுடைய வாழ்க்கையிலே ஏற்படுவதுண்டு. குடியிருக்கும் வீட் டில், சமுதாயத்தில், ஊரில், நாட்டில், உலகில் ஏற்படும் அழுத்தங்க ளினால் மனிதர்களுடைய மனம் தொய் ந்து போய்விடுகின்றது. தைரியமாக கவ லையற்று திரியும் இளைஞர் இளை ப்படைந்து சோர்ந்துபோகின்றார்கள், வாலிபரும் இடறிவிழுகின்றார்கள்;. ஏனெனில் இவர்களுடைய தைரியம் தங்கள் சொந்த பெலத்திலும், தங்களைச் சூழ உள்ள பிரபுக்களிலும், மற்றும் பிரபல்யமான மேல் மட்டங்க ளிலும் இருப்பதால், வாலிபர்களும் இளைஞர்களும் ஏமாற்றமடைந்து இளைப்படைந்து போய்விடுகின்றா ர்கள். தண்ணீரற்ற வறண்ட நிலங்களைப் போல இவர்களுடைய வாழ்க்கை காய்ந்து போய்விடுகின்றது. ஏன் இந்த நிலை மற்ற வர்களுடைய வாழ்க்கையில் ஏற்படுகின்றது? அல்லது ஏன் இந்த நிலை என் வாழ்வில் ஏற்பட்டிருக்கின்றது என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். தேவன் தரும் மெய் ஞானத்தை அற்பமாக எண்ணி, இந்த உலகின் பொக்கி~ங்களை பெருக்கிக் கொள்ளும் வழிகளையும் இடங்களையும் நாடித் தேடுகின்றார்கள். காய்ச்சல் வந்தால் அதற்கு மருந்து போடுவோம் அதன்பின்பு அந்த மருந்தை மருந்து பெட்டிக்குள் வைத்து விடுவோம் என்கிற பிரகாரமாக, தேவனுடைய வார்த்தைகளை, ஆலய வளாகத்திற்குள் வைத்துவிட்டு, இந்த உல கத்;தின் மாயையான ஞானத்தின் அடிப்படையில் தங்கள் வாழ் க்கையை முன்னெடுத்துச் செல்கின்றார்கள். மனிதனுக்கு செம்மையாக தோன்றுகின்ற வழிகளின் முடிவு அழிவாக இருக்கின்றது. மனித னுடைய யோசனை இந்த உலகத்தின் செல்வத்தை பெற்றுத் தரலாம் ஆனால் அவனுடைய யோசனையும், அதனால் உண்டான அறிவும், அதனால் உண்டான செல்வமும் ஒரு நாள் அழிந்து போகும். எனவே நாங்கள் கர்த்தருடைய வார்த்தையின் வெளிச்சத்தில் வாழ வேண்டும், அதை எங்கள் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். அவருடைய வார்த்தையிலே வல்லமை உண்டு.

ஜெபம்:

சர்வ வல்லயுள்ள தேவனே, இந்த உலக மாயைக்குள் சிக்கி விடாதபடிக்கு, உம்முடைய வார்த்தையை நான் கைக்கொண்டு அதை என் குடும்பத்தாருக்கு கற்றுக் கொடுக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 146:2-3