புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 22, 2020)

சூழ்நிலைகளை கண்டு அஞ்சாதிருங்கள்

யாக்கோபு 4:15

ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்க ளும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்ல வேண்டும்.


ஒரு நாட்டிற்கு புதிதாய் வந்த இளைஞன், தன் பிழைப்பிற்காக வேலை செய்யும்படியாக சில கம்பனிகளுக்கு விண்ணப்பம் செய்திருந்தான். அந்த நாட்டின் வேலைத் தளங்களைக் குறித்த அறிவோ அனுபவமோ அற்றவனாக, நம்புவதற்கும் ஏதும் இல்லாதிருந்த அவன், தேவனை நோக்கிப் பார்த்தான். அற்புதவிதமாக அவன் எதிர்பார்த்ததற்கும் மேலா கவும், பலர் பார்த்து ஆச்சரியப்படும் வண்ணமாக ஒரு வேலையைக் கொடுத் தார். நாட்டுக்கு புதியவர் என்று கம்ப னியிலே அற்பமாக எண்ணப்பட்டிருந் தபோதும், ஒரு சில மாதங்களுக்குள் அவனை தேவன் உயர்த்தினார். ஆண் டுகள் கடந்து சென்ற பின்பு, அவனுக் குள் தன்நம்பிக்கை பெருகிற்று. நாட் டின் நடப்புக்கள் என்ன என்பதை அறிந்து கொண்டான். எங்கே, எப்படி, என்ன வேலைக்கும் விண்ணபிக்க என க்குத் தெரியும் என்ற மனநிலை அவனையறியாமலே அவனுக்கு உண்டானது. ஒரு சில ஆண்டுகளுக்கு பின், குறிப்பிட்ட ஒரு சூழ் நிலையை தவிர்த்துக் கொள்ளும்படியாக, அவசரவசரமாக வேறு ஒரு வேலையை தேடி அங்கே சென்றான். தனக்கு தெரிந்த எல்லா திற மைகளையும் அங்கே காட்டிய போதும், பிரச்சனைகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தது. நெருக்கங்கள் அதிகரித்தபோது, முதலாவது வேலையை கர்த்தர் தந்தார், இரண்டாவது வேலையை நான் என் விருப்பப்படி தெரிந்து கொண்டேன் என்பதை உணர்ந்து கொண்டான். கர்த்தர் இரக்கமுள்ளவரானதால் அவனுக்கு தப்பித்துக் கொள்ளும் போக்கை உண்டாக்கினார். பிரியமானவர்களே, நாங்கள் முயற்ச்சி செய்ய வேண்டும், பிரயாசப்பட வேண் டும் என்பது உண் மை. ஆனால், பல வேளைகளிலே மனிதர்கள் கர்த்தருடைய சித்தத்தி ற்கு மேலாக தங்கள் பிரயாசங்களை மேன்மைப் படுத்திக் கொள்கின் றார்கள். கர்த்தருக்கு சித்தமானால் இதை செய்வேன் என்பதற்கு பதி லாக, தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கமான சூழ்நிலையை தவிர்த் துக் கொள்ளும்படிக்கு, உலக தரவுகளின்படி, சூழ இருக்கும் தேவனை அறியாத மனிதர்களின் ஆலோசனைப்படியும், அவசரமாக தங்கள் முடி வுகளை எடுத்துக் கொண்டு, தங்களைத் தாங்களே பல உபத்திரவ ங்களுக்குள் சிக்க வைத்துக் கொள்கின்றார்கள். நாளை என்ன நடக் கும் என்பதை நாங்கள் அறியோம், ஆதலால், கர்த்தருடைய சித்தத் திற்கு எங்களை ஒப்புக் கொடுப்போம்.

ஜெபம்:

சகலமும் அறிந்த சர்வவல்ல தேவனே, என்னுடைய சுயவி ருப்பப்படியும், என் அறிவுக்கெட்டியபடியும் தீர்மானங்களை எடுக்காமல், உம்முடைய சித்தப்படி என் வாழ்க்கையை வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 4:10