தியானம் (பங்குனி 21, 2020)
பாக்கியமுள்ள மனிதர்கள் யார்?
சங்கீதம் 128:1
கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கி றவன் எவனோ, அவன் பாக்கியவான்.
“இப்போது எனக்கு பதினெட்டு வயதாகிவிட்டது, எனவே என் முடி வுகளை எடுக்க எனக்குத் தெரியும்” என ஒரு வாலிபன் தன் பெற்றோ ருக்கு கூறினான். இந்த உலகின் நியமங்களின்படி, பல நாடுகளிலே 18 வயது வந்ததும், அவர்களை வயதானவர்கள் அல்லது பெரிய வர்கள், என்று நாட்டின் சட்டத்தின்படி ஒரு குடிமகனுக்குரிய உரிமை கள் யாவும் அவர்களுக்கு உரித்தாகு கின்றது. பின்பு அவரவர் செயற்பாடுக ளுக்கும் அதன் பின்விளைவுகளுக்கும் அவர்களே பொறுப்பானவர்கள். தேர்த லிலே பங்கேற்று வாக்களிக்க தகுதி பெறுகின் றார்கள். இப்படியாக பல வயதானவர்களுக்குரிய (யனரடவள) உரி மைகளையும் பொறுப்புக்களையும் வகையறுத்திருக்கின்றார்கள். இன்றிர வோடு எனக்கு பதினெட்டு ஆகிவிடும் நாளை நான் என் முடிவுகளை எடுப்பேன் என்று கூறுவதற்கு, மெய் ஞானமானது ஒரு மென்பான த்தை போல எவருக்கும் கொடுக்கப்படுவதில்லை. தேவனுக்கு பயந்து அவர் வழிகளில் நடக்கின்ற மனிதனிடத்தில் மெய் ஞானம் இருப்ப தால் அவன் தன் இளவயதிலும், முதிர்வயதிலும் தனக்குரிய வாழ்வில் நன்மையானதையே தெரிந்து கொள்வான். எப்போது படலை திறக்க ப்படும், எந்த எண்ணமுமில்லாமல் நான் காண்கின்ற யாவரோடும் முட் டுவேன் என்று இருக்கும் கட்டுக்கடங்காத முரட்டாட்டமுள்ள காட்டுக் கழுதையைப் போன்ற மனநிலையுடையவர்கள் எந்த வயதானாலும் தங்கள் வாழ்வில் பிழையான தீர்மானங்களையே எடுத்துக் கொள்கின் றார்கள். பிரியமானவர்களே, இது வாலிபருக்குரிய சிந்தனையல்ல.. எங்கள் யாவருக்குமுரிய சிந்தனையே. எந்த வயதிலே நான் என் இ~;டப்படி வாழமுடியும்? சிந்தித்துப் பாருங்கள். எந்த வயதிலே தேவ சித்தத்தை தள்ளிவிட்டு, நான் நினைத்ததை நிறைவேற்ற முடியும்? நாங்கள் பூமியிலே வாழும்வரை பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை எவ்வேளையிலும் செய்கின்ற பிள்ளைகளாக மாறிவிடவேண்டும். என் அலுவல்களைப் பார்க்க எனக்குத் தெரியும் என்று தன் அறியாமையி னாலே கூறும் வாலிபனைப் போன்ற மனநிலை எங்களிடம் இருக்கக் கூடாது. நாங்கள் அப்படி கூறுவோமாக இருந்தால், நாங்கள் தேவனை இன்னும் அறிய வேண்டிய பிரகாரமாக அறியவில்லை என்றே பொரு ட்படும். எனவே எத்தனை வருடங்கள் கடந்தாலும் எப்போதும் தேவனு க்கு பயந்து அவர் வழியில் நாங்கள் நடக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
ஜெபம்:
வழிநடத்தும் நல்ல தேவனே, காலங்கள் கடந்து சென்றாலும், நான் வயோதிபத்தை அடைந்தாலும், என் ஜீவன் பிரியும்வரை, நான் உமக்குப் பயந்து உமது வழிகளிலே நடக்க என்னை உணர்வுள்ளவனா (ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - கொலோசெயர் 3:1