புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 20, 2020)

வேதனை தரும் வழிகளை விட்டுவிலகுவோம்

சங்கீதம் 139:24

வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து நித்திய வழியிலே என்னை நடத்தும்.


ஒரு இளைஞன் மோட்டார் சைக்கிளில் வேகமாக அங்குமிங்குமாக மற் றய வாகனங்களுக்கு முன்பாக சென்று கொண்டிருந்தான். எல்லா வாகன ங்களின் தரிப்பிடமானது வந்தபோது, தெருவிலே சென்று கொண்டிரு ந்த ஒரு மனிதன் அந்த இளைஞனை அணுகி, தன் வலது கையின் மேற் பகுதியிலுள்ள நீண்ட தழும்பைக் காண்பித்து, “நானும் ஒரு காலத் திலே கவலயீனமாக மோட்டார் சைக் கிளை ஓட்டியதால், பெரிதான ஆபத் தை சந்திக்க வேண்டியதாக இருந்தது. நான் இன்று உயிர் பிழைத்திருப்பது அதிசயம். எனவே மிக அவதானமாக மோட்டார் சைக்கிளை ஓட்டு” என்று கூறினான். சற்று இந்த சம்பவத்தை சிந் தித்துப் பாருங்கள். “மது போதையி னாலே, உன் கடந்த காலத்தை கெடு த்துவிட்டு, இப்போது எனக்கு புத்திமதி கூறுவது எப்படி” என்று பலர் கூறுவது உண்டு. காய்ச்சலும் தலையி டியும் வராமலே காப்பது நல்லது. ஆனால் அப்படி தன்னை பாதுகாக் காதவனுக்கே காய்ச்சலினதும் தலையிடியினதும் வேதனையை பற்றி நன்றாக தெரியும். ஒருவன் அறிந்தோ அறியாமலோ ஒரு குற்றத்தில் அகப்பட்டு, அதை உணர்ந்து, மனம்வருந்தி, மனந்திரும்பிய பின்பு, தன்னுடைய அனுபவத்தைப் பற்றி அவன் கூறும் புத்திமதியை தள் ளிப் போடாதிருங்கள். தேவனுடைய தீர்க்கதரிசி, துதிவீரன், போர்வீரன், நாட்டின் அரசன் என்ற அழைப்பைப் பெற்ற தாவீது ராஜா, சில தட வைகள் தேவனுடைய பிரமாணங்களை கைகொள்ளாமல் பாவம் செய் தார். தன் பிழையை உணர்ந்த போது அதை ஏற்றுகொண்டு, தேவ னிடம் திரும்பினார். தேவன் அவரை மறுபடியும் தன்னிடமாய் ஏற்றுக் கொண்டார். தாவீது தன்னுடைய குற்றங்களால் வந்த பின்விளை வுகளை நன்றாக அறிந்து கொண்டார். ஆகவே தாவீதின் வாழ்;க்கை யானது, நாங்கள் துணிகரமாக பாவம் செய்து தப்பிக் கொள்ளலாம் என்பதற்குரிய அனுமதிப் பத்திரமல்ல. மாறாக, தாவீது தவறியதால் அவரோடுகூட இன்னும் அநேகர் துன்பத்தை அனுபவி த்தார்கள். எனவே வேதனையான பின்விளைவுகளை தவிர்த்துக் கொள்ளும்படி க்கு தாவீது செய்த தவறுகளை நாங்கள் செய்யா தபடிக்கு எங்களது இருதயத்தைக் காத்துக் கொள்ள வேண்டும். எங்களால் தேவனுக்கும். எங்களுக்கும், மற்றவர்களுக்கும் வேதனை உண்டாக்கும் வழிகளிருக் குமாயின் அவைகளை எங்களை விட்டு அகற்றிவிடுவோம்.

ஜெபம்:

என் வழிகளை அறிந்த தேவனே, பழைய வாழ்க்கைக்குரிய மோசம் போக்கும் வழிகளை விட்டு விலகி, உம்முடைய மேன்மையான வழியை நான் தெரிந்து கொள்ள பிரகாசமுள்ள மனக் கண்களைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதிமொழிகள் 3:6