புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 19, 2020)

எங்கள் நடைகள் ஸ்திரப்படட்டும்

சங்கீதம் 119:5

உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி, என் நடைகள் ஸ்திரப்பட்டால் நலமாயிருக்கும்.


மனிதர்கள், தங்கள் நிலைகளையும், தங்கள் நடவடிக்கைகளையும் நியாயப் படுத்தும் சுபாவமுடையவர்களாக இருக்கின்றார்கள். இந் நிலை மையானது மேற்கத்தைய நாடுகளில் வெளியரங்கமாக இருப்பதை செய்திகளின் வாயிலாக அறிகின்றோம். அதாவது, சாதாரண மனிதர் கள் கூட, அற்பமான காரியங்களில் எந்த தயக்கமுமின்றி மேலான அதிகாரங்களுக்கு எதிராக வழக்குக ளை தாக்குதல் செய்வார்கள். இப்படி யாக, தங்களை தாங்கள் நியாயப்ப டுத்திக் கொள்ளும் நிலைமைகள் உல கின் எல்லா அமைப்புக்களிலும் காண ப்படுகின்றது. தங்கள் போக்குகளை ஆராய்ந்து பார்த்து தங்களை திருத் திக் கொள்வதற்கு பதிலாக, தங்கள் வழிகளுக்கு எதிராக பேசும் மனிதர்களின் வாயை அடைத்துப் போடு ம்படிக்கு தங்களால் முடிந்த எதிர்வாதங்களை கூறிக் கொள்கின் றார்கள். எடுத்துக் காட்டாக, உங்கள் மகனின் போக்குகள் நல்லதாக தோன்றவில்லை ஆதலால் அதை சற்றுக் கவனித்துக் கொள்ளுங்கள் என்று ஒரு போதகர், அவனுடைய தாயாரிடம் கூறினார். “சபையிலே இருக்கின்ற மற்ற பிள்ளையைப் பாருங்கள், அவனோடு ஒப்பிட்டு பார்க்கும் போது என்னுடைய மகன் எவ்வளவு சிறந்தவன்” என்று தாயார் பதிலளித்தார். போதகர் அவளை நோக்கி: சகோதரியே, இரண்டு வரு டங்களுக்கு முன், நான் உங்களுடன் பேசுவதைப் போல, அந்த வாலிபனுடைய பெற்றோரிடமும் பேசினேன், அவர்கள் அதைக் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தங்கள் பிள்ளையின் வழிகளை நியாயப்படுத்தினதின் விளைவை இன்று காண்கின்றீர்கள். எனவே மற்றவனோடு எங்கள் வாழ்க்கையை ஒப்பி டாமல், வேதத்திலுள்ள கர்த்தருடைய வசனத்தின்படி எங்கள் வாழ் வைச் சரிப்படுத்திக் கொள்வதே அவசியமானது எனத்; தயவாக கூறி னார். எங்கள் வழிகளை நாம் நியாயப்படுத்துவது இந்த உலக போ க்கின்படி எங்கள் உரிமையாக இருக்கலாம். ஆனால் இருதயங்களை ஆராய்ந்தறிகின்ற தேவன் எங்கள் மனதில் என்ன இருக்கின்றது என அறிகின்றார். தேவ பிரமாணங்களை நாங்கள் கருத்தாய்க் கைக் கொள் ளும்படி அவர் எங்களுக்கு கற்றுத் தருகின்றார். மற்றவர்களின் நற் சாட்சியற்ற வாழ்க்கையோடு எங்கள் வாழ்வை ஒப்பிடாமல், தேவ பிர மாணங்களைக் கைக்கொள்ளும்படி, எங்கள் நடைகள் ஸ்திரப்பட்டால் அது எங்கள் சமாதானமான வாழ்விற்கு நலமாயிருக்கும்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, மற்றவர்களுடைய நற்சாட்சியற்ற வாழ்க்கையை பார்த்து என் பாவங்களை நியாயப்படுத்தாமல், என் வழிகளை உம் வசனத்தின் வெளிச்சத்தில் ஆராய்ந்து முன்னேற கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 7:24-25