புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 18, 2020)

மிகுந்த மனமிரக்கமுள்ள தேவன்

எபிரெயர் 12:5

அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்து கொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.


நள்ளிரவு தாண்டியும் தந்தையாருக்கு தூக்கம் வரவில்லை. தந்தை யாருக்கு மட்டுமல்ல, தாயாரும், அவர்களுக்கிருந்த ஒரே மகளுக்கும் தூக்கம் வரவில்லை. தாயார் தன் மகளோடு கட்டிலிலே சாய்ந்திருந்து அவளை தேற்றிக் கொண்டிருந்தாள். வாலிப பிரயாயத்திலிருக்கும் மகளானவள், பெற்றோரின் அறிவுரைகளை அற்பமாக எண்ணி, அவை களை அசட்டை செய்து வருவதை கவ னித்து வந்த தந்தையார், தான் உயிரு க்குயிராக நேசித்த மகளை சிட்சிக்க (கண்டித்து, தண்டித்தல்) வேண்டிய நாளாக அந்நாள் இருந்தது. அந்த செயல் தந்தையாருக்கு இலகுவான காரியமாக இருக்கவில்லை. தாயாரால் அதை சகி க்க முடியவில்லை. செல்லமாக வளர் க்கப்பட்ட மகளானவள்; அதை சற்றும் எதிர்பார்க்கவுமில்லை. தற்போது வீட் டில் நிலவும் சூழ்நிலை எவருக்கும் ஏற்புடையதாக இருக்கவில்லை. தந்தை தன் மகளை உண்மையாக நேசித்தபடியால், அவள் தவறான வழியில் செல்லாதபடிக்கு அவளை சிட்சித்தார். அதே போலவே, எங்களை நேசிக்கின்ற பரமபிதாவும், சில வேளைகளில் சிட்சைகளை எங்கள் வாழ்வில் அனுமதிக்கின்றார். நாஙகள் வேதனைப் படுவதில் அவர் மகிழ்ச்சியடைகின்றவர் அல்லர். எங்கள் பாடுகளின் பாதையில் அவர் களிகூருகின்றவரும் அல்லர். கர்த்தர் இரக்கமும் மனஉருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிரு பையும் உள்ளவர். கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக் கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலுமுள்ளது. (சங்கீதம் 145:8-9). மகளானவள், பின்விளைவுகளை சற்றும் சிந்திக்காமல், தற்கா லத்திலே தன்னுடைய இ~;டப்படி வாழ்க்கையை நடத்தலாம் என்று எண்ணம் கொண்டாள். தன் மகளை சிட்சித்த தந்தையாரின் அனுபவம் பெரியது. தன் மகள் நிதானமற்றவளாய் தன் மனவிருப்பத்தின்படி தற்போது முடிவுகளை எடுத்து, பின்பு வாழ்நாள் முழுதும் க~;டப்ப டாமல் இருக்கும்படியாகவே தந்தையார் தன் மகளை நல்வழிப் படு த்தினார். எங்கள் பரம தந்தையானவர், எல்லாவற்றையும் அறிந்தவ ராயிருக்கின்றார். இனிமேல் வரவிருக்கும் நித்திய நன்மைக்கு எங்களை நடத்தி செல்கின்றார் எனவே அவர் நம்மை சிட்சித்து கடிந்து கொள்ளும் போது சோர்ந்து போகாமல். அவரை கிட்டிச் சேரக்கடவோம்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, நீர் என்னை நல்வழிப்படுத்தும் போது சோர்ந்து போகாமல் உம்மையே இன்னும் அதிகமாக பற்றிக் கொண்டிருக்கும் உணர்வுள்ள இருதயத்தை எனக்கு தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 18:2