புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 13, 2020)

கர்த்தருடைய வழிகள் மேன்மையானவைகள்

ஏசாயா 55:8

என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிக ளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.


எனக்கு போதிப்பதற்கு இவர் யார்? நான் யார் என்பது இவருக்கு தெரியாதா? என்று இந்த உலக முறைமைகளின் படி செல்வாக்குள்ள மனிதன் கூறிக் கொண்டான். இப்படிப்பட்ட பெருமையுள்ள எண்ணம், தான் யார் என்பதையும், தன் உள்ளத்தில் என்ன இருக்கின்றதென்பதையும் ஒரு மனிதனுக்கு வெளிப்படுத்தும். நேற்றைய நாளிலே நாங் கள் தியானித்தபடி படைத்தலைவனாகிய நாகமான் இந்த உலக த்தின் பார்வையிலே பெரிய மனுஷனாக இருந்தான். அவன் வாழ்ந்த சீரிய தேசத்திலே நன்மதிப்பு பெற்ற அவனு க்கு, இந்த உலகம் தரக்கூடிய சுக வாழ்வின் வசதிகள் யாவையும் பெற் றுக் கொள்ளுவது இலகுவான காரி யம். ஆனால் அவனிடத்திலே ஒரு குறைவு உண்டாயிருந்தது. மெய்யான தேவனாகிய கர்த்தர் யார் என்பதை யும் அவருடைய வழி இன்னதென்பதையும் அவன் அறியாதிருந்தான். அந் நாட்களிலே இஸ்ரவேலிலே வாழ்ந்த தேவ மனுஷனாகிய எலிசா, எளிமையான வாழ்;க்கையை வாழ்ந்து வந்தார். இந்த உலகம் தரும் சுக போகங்களுக்கும், அதிலுள்ள மேன்மையான பொக் கிஷங்களு க்கும் அவர் உடன்பட்டவர் அல்ல. ஆனாலும் அவருடைய வாழ்க்கை யிலே நிறைவு இருந்தது. தேவனுடைய வழி இன்னதென்பதை அவர் திட்டமாக அறிந்திருந்தார். தேவ ஆவியானவர் அவரோடு கூட இரு ந்தார். தேவன் தம்முடைய திட்டத்தை மனிதர்களுக்கு வெளி ப்படு த்தும் ஒரு பாத்திரமாக எலிசா வாழ்;ந்து வந்தார். மெய்யான தேவன் யார் என்பதை அறியும்படிக்கு நாகமானுக்கு ஒரு வழி உண்டா யிருந்தது. அந்த வழி, நாகமானின் இருதயத்திற்கு ஏற்ற வழியாகத் தோன்றவில்லை. தன்னுடைய வாழ்க்கையின் அந்தஸ்தின்படி தீர்க்க தரிசியாகிய எலிசா தனக்கு செய்ய வேண்டும் என்று எண்ணம் கொண் டிருந்தான். ஆனால் தேவனுடைய வழிகள் மனுஷனுடைய வழிகள் அல்ல. பிரியமானவர்களே, ஒரு எளிமையான வாழ்க்கை வாழும் மனி தன் வழியாக தேவன் உங்களோடு பேச சித்தம் கொண் டால், அதை அசட்டை செய்யாதிருங்கள். இந்த உலகத்தின் கல்வி, செல்வம் அந்தஸ்து எந்த மனிதனுக்கும் நித்திய ஜீவனை பெற்று தருவதில்லை. தேவனுடைய சித்தத்;திற்கு எங்கள் வாழ்வை நாங்கள் ஒப்புக் கொடுக்கும்படி அவருடைய வழிகளுக்கு திரும்பக்கடவோம்.

ஜெபம்:

ஜீவனுள்ள தேவனே, என்னுடைய சிந்தையின்படி நீர் செயலா ற்ற வேண்டும் என்ற சுயசித்தத்தைவிட்டு, உம்முடைய வழிகளின் மேன்மையை உணர்ந்து வாழும் இருதயத்தைத் எனக்குத் தாரும். இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதிமொழிகள் 21:4