புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 12, 2020)

தேவ நன்மைகளை பெற்றுக் கொள்வோம்

1 சாமுவேல் 16:7

மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.


சீரிய ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமான் என்பவன் தன் ராஜா வினிடத்தில் பெரிய மனுஷனும் எண்ணிக்கையுள்ளவனுமாயிருந்தான். அவனைக் கொண்டு கர்த்தர் சீரியாவுக்கு இரட்சிப்பைக் கட்டளையி ட்டார். மகா பராக்கிரமசாலியாகிய அவனோ குஷ்டரோகியாயிருந் தான். கர்த்தரை அறியாத அந்த படைத் தளபதி, அந்நாட்களிலே தன் குஷ்டரோகம் குணப்படும்படியாய், கர் த்தருடைய தீர்கதரிசியை சந்திக்கும்படி வெகுமதிகளோடும் தன் குதிரைக ளோடும் தன் இரதத்தோடும் வந்து தீர் கதரிசியாகிய எலிசாவின் வாசற்படியி லே நின்றான். அப்பொழுது எலிசா: நாகமானிடத்தில் ஆள் அனுப்பி, “நீ போய், யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம்பண்ணு அப் பொழுது உன் மாம்சம் மாறி, நீ சுத்தமாவாய்” என்று சொல்லச்சொன்னான். இது எலிசாவின் வார்த்தை அல்ல கர்த்தரு டைய வார்த்தை. அதற்கு நாகமான் கடுங்கோபங்கொண்டு,நான் ஸ்ந hனம்பண்ணிச் சுத்தமாகிறதற்கு இஸ்ரவேலின் தண்ணீர்கள் எல்லாவற் றைப்பார்க்கிலும் தமஸ்குவின் நதிகள் நல்ல தல்லவோ என்று சொல்லி, உக்கிரத்தோடே திரும்பிப் போனான். அவன் ஊழியக்காரர் சமீபத்தில் வந்து, அவனை நோக்கி: தகப்பனே, அந்தத் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்ய உமக்குச் சொல்லியிருந்தால் அதை நீர் செய்வீர் அல்லவா? ஸ்நானம் பண்ணும், அப்பொழுது சுத்த மாவீர் என்று அவர் உம்மோடே சொல்லும் போது, அதைச் செய்ய வேண்டியது எத்தனை அதிகம் என்று சொன்னார்கள். அந்த அறி வுரையை கேட்டு, தன் பெருமையை விட்டு, தேவனுடைய மனு~ன் கூறிய வார்த்தைக்கு கீழ்ப்படியும்படி தன்னை ஒப்புக் கொடுத்து, யோர் தானில் ஏழுதரம் முழுகினபோது, அவன் மாம்சம் ஒரு சிறுபிள் ளையின் மாம்சத்தைப்போல மாறி, அவன் சுத்தமானான். பிரியமான வர்களே, மனுஷன் வெளிதோற்றங்களையும் தகமைகளையும் பார்த்து, அதன்படி அவர்களை நடத்திக் கொள்கின்றான். ஆனால் கர்த்தரோ இருதயத்தை பார்க்கின்றார். மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்த ருக்கு அருவருப்பானவன். எங்கள் அகம்பாவங்களினால் இருதயத்தை கடினப்படுத்தி தேவ நன்மைகளை இழந்து போய்விடாமல், எப்போ தும் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியும் இருதயமுள்ளவர்க ளாக வாழக்கடவோம்.

ஜெபம்:

இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனே, உம்முடைய வார்த்தைகளை கேட்கும் போது அவைகளுக்கு கீழ்ப்படிந்து வாழும் ஞானமுள்ள இருதயத்தை தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 இராஜ 5:1-14