புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 10, 2020)

எல்லா ஆளுகைக்கும் மேலான தேவனை நோக்கி பாருங்கள்

ஏசாயா 37:16

சேனைகளின் கர்த்தாவே, கேருபீன்களின் மத்தியில் வாசம்பண்ணுகிற இஸ்ர வேலின் தேவனே, நீர் ஒருவரே பூமியின் ராஜ் யங்களுக்கெல்லாம் தேவ னானவர்; நீர் வானத்தை யும் பூமியையும் உண் டாக்கினீர்.


எசேக்கியா என்னும் ராஜாவின் நாட்களிலே யூதா ராஜ்யத்தின் குடி களுக்கு பெரும் துன்பம் உண்டானது. அந்நாட்களிலே அசீரியா ராஜா வாகிய சனகெரிப் மிகவும் பெலத்திருந்தான். சனகெரிப் ராஜா, ரப்சாக்கே என்பவனை பெரிய சேனையோடே எசேக்கியா ராஜா வினிடத்தில் அனுப்பி, எருசலேம் குடிகளுக்கு முன்னிலையில், எபிரெயருடைய பாஷையிலே, தேவனாகிய கர்த்தரையும், எசேக்கியா ராஜாவையும் நிந்தித்து, ஜனங்களை கலங்கடிக்கும் வண்ணமாக தகாத வார்த்தைகளை பேசினான். “இந்தநாள் நெருக்கமும், கண்டிதமும், தூஷணமும் அநுபவிக்கிற நாள்; பிள்ளைப்பேறு நோக்கியிருக்கிறது. பெறவோ பெலன் இல்லை” என்று தங்கள் அவல நிலையை எசேக்கியாவின் தூதுவர் கள், தேவ மனிதனாகிய ஏசாயா தீர்க்க தரிசிக்கு அறிவித்தார்கள். “இதோ, அவன் ஒரு செய்தியைக்கேட்டு, தன் தேசத்துக்குத் திரும்புவதற்கான ஆவி யை நான் அவனுக்குள் அனுப்பி, அவனை அவன் தேசத்திலே பட்டயத் தால் விழப்பண்ணுவேன் என்று கர்த் தர் உரைக்கிறார் என்பதை எசேக்கியா ராஜாவிற்கு சொல்லுங்கள்” என்று ஏசாயா தீர்க்கதரிசி செய்தி அனுப்பினார். தேவ மனிதன் கூறிய வார்த்தையின்படியே அசீரியா ராஜாவுக்கு நேர்ந்தது. பிரியமானவ ர்களே, சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு முன்பாக யார் நிற்க முடி யும்? அவருடைய சித்தத்திற்கு எதிராக யார் கிரியைகளை நடப்பிக்க முடியும்? ஒருவராலும் கூடாது. எனவே தேவன் அழைத்த அழைப்பை நிறைவேற்றும்படி முன்னேறிச் செல்லுங்கள். மாம்சத்திலே போர் செய் யாதிருங்கள். எங்கள் போராயுதங்கள் மாம்ச பெலன் அல்ல. அது தேவ ஆவியினால் உண்டாகும் பெலனாக இருக்கின்றது. எனவே எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத் தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மன உறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டு தலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, உம்முடைய ஆளுகைக்கு விரோதமாக அவிசுவாசமான வார்த்தைகளைப் பேசாதபடிக்கு, விசுவாசத் துடன் ஜெபத்தில் தரித்திருக்க பெலன் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தீமோ 6:9