புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 09, 2020)

தேவ நீதி வெளிப்படும் நாள் வருகின்றது

ஏசாயா 26:21

இதோ, பூமியினுடைய குடிகளின் அக்கிரமத்தினிமித்தம் அவர்களை விசாரிக்கும்படி கர்த்தர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து புறப்பட்டுவருவார்;


எலியா என்னும் தேவ பக்தனின் நாட்களிலே, ஆகாப் ராஜாவும் அவன் மனனைவியாகிய யேசபேலும் இஸ்ரவேலில் ஆட்சி செய்து வந்தார்கள். அந்நாட்களிலே பொருளாதார பஞ்சம் மட்டுமல்ல, கொ டிய ஆன்மீக பஞ்சமும் ஏற்பட்டிருந்தது. தேசத்திலே தேவ நீதி அபூர் வமாக இருந்தது. தேசம் அந்நிய காரியங்களால் தீட்டுப்பட்டிருந்தது. வல்லமையாக பயன்படுத்தப்பட்ட தேவ மனிதனாகிய எலியா தன் உயிருக்கு பயந்து ஓடி ஒளிந்து கொண்டார். சேனை களின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக் கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்மு டைய பலிபீடங்களை இடித்து, உம் முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தி னால் கொன்றுபோட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகி றார்கள் என்று தேவனாகிய கர்த்தரிடம் கூறினார். கர்த்தரோ எலி யாவை நோக்கி: அந்நிய தேவர்களால் தங்களை தீட்டுப்படுத்தாத ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன் என்று கூறினார். கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகளை சற்று சிந்தித்துப் பாருங்கள். “கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமா யிருக்கிறது. அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவ னுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது. அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.” எனவே இந்த உலகிலே நட க்கும் அநீதிகளை கண்டு நீங்களும் சோர்ந்து போய்விடாதிருங்கள். நீதியின் விருட்சங்களாக தேவ நீதியை இந்த உலகத்திலே நிறைவே ற்றுவதற்காக அழைக்கப்பட்டிருக்கின்றீர்கள். ஆகவே, இந்த உலக த்தில் நடக்கும் அநீதிகளையும் அநியாயங்களையும் கண்டு சோர்ந்து போகக் கூடாது. கர்த்தருடைய நாள் உண்டு. அந்த நாள் எங்களுடைய நாட்களில் வரத் தாமதித்தாலும், அந்த நாள் நிச்சயமாக வரும். கர்த்தர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து புறப்பட்டுவருவார்; பூமி தன் இரத்த ப்பழிகளை வெளிப்படுத்தி, தன்னிடத்தில் கொலைசெய்யப்ப ட்டவர்களை அது மூடாதிருக்கும். எனவே அந்நாள் வரைக்கும் தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாய் இந்த உலகத்திலே தேவனுடைய திவ்விய ஒளி வீசும் சுடர்களாகத் திகழுங்கள்.

ஜெபம்:

நீதியின் தேவனே, என்னை நம்பி நீர் தந்த பொறுப்பதனை நீர் வரும்வரை காத்துக் கொள்ளும்படியாக உம் அழைப்பின் பந்தயப் பொருளை நோக்கித் தொடர கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 5:10-12