புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 08, 2020)

தேவ சமாதானம் உங்களை ஆளக்கடவது

ஏசாயா 26:3

உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொ ள்வீர்.


வாழ்க்கையின் பழுவினால் களைத்து இளைத்துப் போகும் வேளைக ளிலும், வாழ்வின் உயர்வான நேரத்திலும், தேவனுக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்த நாட்களிலும், அறிந்தோ அறியாமலோ தேவனுடைய பிரமா ணங்களை மீறி நடந்தேன் என்று உணர்ந்த வேளைகளிலும், தேவ னுடைய தாசர்கள் தேவனையே சார்ந்து கொண்டார்கள். கர்த்தர் தாவீதை அவனுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும், சவுலின் கை க்கும், நீங்கலாக்கி விடுவித்த போது, கர்த்தர் என் கன்மலையும், என் கோட் டையும், என் ரட்சகருமானவர். தேவன் நான் நம்பியிருக்கிற துருக்கமும், என் கேடகமும், என் ரட்சணியக்கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமும், என் புக லிடமும், என் ரட்சகருமானவர்; என் னை வல்லடிக்கு நீங்கலாக்கி ரட்சிக்கி றவர் அவரே என்று பாடினார். ஒரு காலகட்டத்திலே தேவனுக்கு எதிராக பாவம் செய்தேன் என்று உணர்ந்த போது “தேவனே, உமது கிருபையி ன்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறு தல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும். என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும்.” என்று பாடி னார். கருப் பொருளாவது, வாழ்ந்தாலும், மரித்தாலும், உயர்ந்தாலும், தாழ்ந்தாலும் தேவனோடே இருப்பேன் என்றும் ஆசீர்வாதத்தைப் பெற் றாலும், ஒருவேளை தண்டிக்கப்பட்டாலும் தேவனுடைய கரத்திலிரு ந்தே அதை பெற்றுக் கொள்வேன் என்று அவர் வாழ்ந்தார். அது போல, வேதத்திலுள்ள பரிசுத்தவான்கள் யாவரும் வாழ்ந்தார்கள். தங்கள் வாழ்வின் எந்த சூழ்நிலையிலும் தேவனை உறுதியாய் பற்றிக் கொண் டிருந்தார்கள். நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிரு க்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந் திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திரு ப்த்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவு படவும் போதிக்கப்பட்டேன். என்று கர்த்தருக்குள் உறுதியாய் இருந்த தேவ ஊழியராகிய பவுல் தேவ சமாதானத்தை பெற்றுக் கொண்டார். அது போலவே நாங்கள் எங்கள் வாழ்வின் எந்த நிலைமையிலும் எங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் உறுதியாய் தரித்திருந்தால் அவர் தமது சமாதானத்தை தந்து எங்களைக் காத்துக் கொள்வார்.

ஜெபம்:

பரலோக தந்தையே, உயர்விலும், தாழ்விலும், நிறைவிலும், குறைவிலும் உம்மையே உறுதியாய் பற்றிக் கொண்டு, தேவ சமாதானத்தைக் காத்துக் கொள்ளும்படி எனக்கு அருள்புரிவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:11-13