புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 07, 2020)

ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும்

ஏசாயா 25:4

கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெருவெள்ளத் தைப்போல் இருக்கையி ல், நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும் பெருவெள்ளத்துக்குத் தப் பும் அடைக்கலமும், வெ யிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்.


ஒரு நாள், மாலை வேளையிலே பெரியோர் சிறியோர் யாவரும் ஒரு குறிப்பிட்ட பாடசாலை வளாகத்திற்குள் விரைந்து சென்று கொண்டி ருப்பதை கண்ட வயோதிபர் ஒருவர், ஒரு சிறு பையனைப் பார்த்து, “மகனே, எல்லோரும் ஏன் விரைந்து ஓடுகின்றார்கள்?” என்று கேட் டார். அதற்கு அவன் “அந்த பெரிய மனுஷன்” ஊருக்கு வந்திரு க்கின்றார் என்று கூறினான். யார் அந்த பெரிய மனுஷன்? பலராலும் அற்பமாக எண்ணப்பட்ட மிகவும் எளிமையான வாழ்க்கை தரமுடைய அந்த ஊருக்கு, அவ்வப்போது ஒரு மனுஷன் வருகை தருவார். தங் கள் தாழ்ந்த நிலையைக் குறித்து தங் களை தள்ளி வைக்காமலும், நியாயந் தீர்க்காமலும் தங்களுக்கு ஏதாவது செய் வார் என்று அவரைக் குறித்த நம்;பி க்கை அந்த ஊர் மக்களுக்குள் இருந் தது. எனவே எந்தத் தயக்கமும் இன்றி யாவரும் அவரைக் காணும்படி செல் வார்கள். பிரியமானவர்களே,அந்த தயா ள குணமுடைய மனுஷனின் இருதய த்தை தொட்ட மீட்பராகிய இயேசு அன்புள்ளவர். அந்த மனுஷன் இந்த உலகின் அதிகாரங்களுக்கு கட்டுப்ப ட்டிருக்கின்றான். உலகில் மூர்க்கவெறி கொண்டு, எளியவர்களை ஒடுக்கும் துன்மார்க்கருக்கு அவனால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், ஏழைக ளின் பெலனும், எளியவர்களின் நம்பி க்கையுமான இயேசு எல்லா அதிகார ங்களுக்கும் துரைத் தனங்களுக்கும் மேலானவர். இந்த உலகிலே தங்களை பெலவான்கள் என்று சொல்லிக் கொள்ளும் மனிதர்கள் எப் படிப்பட்டவர்களாக இருந்தாலும், நிர்க்கதியற்ற சூழ்நிலைகளில் கர்த்தர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும் பெரு வெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழ லுமாயிருக்கின்றார். எனவே கலங்காதிருங்கள். ஒடுக்கப்பட்ட நேரத்திலும், மனம் அங்கலாய்க்கும் காலத்திலும் எங்கள் அருமை மீட்பர் இயே சுவை நோக்கிக் கூப்பிடுங்கள். அவரே அடைக்கலமானவர்.

ஜெபம்:

மனதுருக்கமுடைய தேவனே, இந்த உலகத்தில் பெலனற்று தவிக்கும் வேளைகளிலே எங்ளை நியாயந்தீர்க்காமல் உம்முடைய மிகுந்த இரக்கத்தினால் அணைத்துக் கொண்டதற்காக உமக்கு நன்றி. இரட்ச கர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 1:17