புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 06, 2020)

புதிய வாழ்வின் மேன்மை

2 பேதுரு 2:20

கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளால் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையி லும் கேடுள்ளதாயிருக்கும்.


“நான் யார் என்று இவர்களுக்குத் தெரியாது” என்று மனிதர்கள் கூறு வதை நாங்கள் கேட்டிருக்கின்றோம். அதாவது, தங்கள் கல்வி, சமுக அந்தஸ்து போன்ற உலக தகமைகளையும் அல்லது துன்மார்க்கத் தில் செய்த வீரதீரச் செயல்களையும் குறித்து தங்களை சூழ உள்ளவ ர்களுக்கு ஏதோ ஒரு செய்தியை அனுப்பும்படியாகவே இப்படிக் கூறு வார்கள். அது நற்செய்தி அல்லவே. தேவனை அறியாதவர்கள் தங்கள் அறி யாமையிலே இப்படிப்பட்ட பெரும் பேச் சுக்களை பேசிக் கொள்கின்றார்கள். ஆனால், இப்படிபட்ட எண்ண ங்கள் தேவனுடைய பிள்ளைகளுக்கு தகாத வைகள். இதனால், வேண்டாம் என்று தள்ளிவிட்ட செத்துப்போன மாம்சமான பழைய மனுஷக்குரிய (பழைய வாழ் க்கைக்குரிய) பாவ பழக்கங்களை மறு படியும் எங்களுக்குள் உயிரடையச் செய் கின்றோம். பழைய வாழ்க்கைக்குரிய பழக்கங்களை மறுபடியும் பேசுவ தற்கு நாங்கள் துணிகரம் கொள்ளக் கூடாது. அவைகள் பேசுவதற்கு அலங் கோலமும் வெட்கக்கேடுமானவைகள். நாயானது தான் கக்கினதைத் தின்னு ம்படி திரும்புவதுபோல, மூடனும் தன் மூடத்தனத்துக்குத் திரும்புகிறான். (நீதி 26:11). அப்படியாக தங்கள் அசுத்தமான வாழ்க்கையை குறித்து மேன்மைபாராட்டுகின்றவர்கள், “அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறி ந்த பின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களு க்கு நலமாயிருக்கும். நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்ப ட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது” பிரியமானவர்களே, எங்கள் பழைய வாழ்க்கையை விட்டு புதிய வாழ்க்கையை வாழும்படியாகவே, இயேசு கிறிஸ்து எங்கள் பாவங்களுக்காக சிலுவையிலே தொங்கினார். எனவே விட்டு வந்த பாவங்களை குறித்து மேன்மை பாராட்டாமல், மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தே மேன்மை பாராட்டக்கடவோம்.

ஜெபம்:

இரக்கமுள்ள பிதாவே, என் பழைய வாழ்க்கை முறைமையை ஒழித்து, புதிய வாழ்வை ஈவாய் தந்தீர் ஐயா. அந்த புதிய வாழ்க்கையை பரிசுத்தமாகக் காத்துக் கொள்ளும்படி என்னை வழிநடத்துவீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கலாத்தியர் 6:14