புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 05, 2020)

குணமடையும்படி ஒப்புரவாகுங்கள்

யாக்கோபு 3:14

உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்டாதிருங்கள்;.


இனத்தவர்களுகிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, வாக்குவாதமாக மாறியதால் இரு மனிதர்களுக்கிடையில் பெரும் கசப்பு ஏற்பட்டுவிட் டது. அதில் ஒருவன் மற்றவனைப் பார்த்து “நான் தெருவிலே இரக்க நேர்ந்தாலும் உன்னுடைய வாசற்படியை இனி மிதிக்க மாட்டேன்” என்று சபதம் கூறிவிட்டான். ஆண்டுகள் கடந்து சென்றதும், அந்த சபதத்தை கூறிய மனிதன், மற்றய மனிதனில் எந்த தவறும் இல்லை என்று உணர்ந்த போதும், தன்னை தாழ்த்தி அவனிடம் ஒப்புரவாகிக் கொள் வதற்குப் பதிலாக, தான் கூறிய சபதம் உறுதியானது என்று தன் இருதய த்தை கடினப்படித்திக் கொண்டான். பல ஆண்டுகளுக்கு பின், ஒரு நாள், அந்த ஊரிலே ஏற்பட்ட பெரும் வெள்ளப் பெருக்கினால், பல வீடு களுக்குள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அந்த சபதத்தை கூறிய மனிதனின் வீட்டிற்குள்ளும் வெள்ளம் வந்ததால், அந்த இராத்திரியிலே உயிர் பிழைக்கும்படிக்கு, மாடி வீடு ஒன்றிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது வயோ திபனாக இருந்த அந்த சபதம் கூறிய மனிதனை, அவன் பிள்ளைகள் தூக்கிக் கொண்டு, எந்த வாசற்படியை மிதிக்க மாட்டேன் என்று சப தம் எடுத்தானோ, அங்கே கொண்டு செல்ல வேண்டியதாயிற்று. பிரிய மானவர்களே, ஒரு வேளை நீங்கள் காரணத்துடனோ அல்லது கார ணமில்லாமலோ உங்கள் இருதயத்தை கடினப்படுத்தி சபதம் கட்டிக் கொண்டிருந்தால், அதை விட்டுவிடுங்கள். இப்படிப்பட்ட ஞானம் பரத் திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல், லௌகிக சம்பந்தமான தும், ஜென்மசுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கி றது. வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலக மும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு. வைராக்கியம், வன்மம் கசப்பு நிறைந்த இருதயத்தில் தேவ சமாதானம் குடி கொள்ள முடியாது. அங்கே ஆன்மீக நோய் இருக்கும். அந்த நோய் குணப்படும்படி குடும்ப கௌரவங்களையும், வீண் பெருமைகளையும் அகற்றிவிடு ங்கள். உங்கள் நிலையை தேவன் நன்றாக அறிந்திருக்கின்றார். அவர் எத்தனையோ கிருபையை உங்கள் உயிருக்கு செய்திருக்கின்றார். அதை உணர்ந்தவர்களாக ஒப்புரவாகும் மனநிலையை உங்களுக்குள் உண்டு பண்ணிக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

மனதுருக்கமுள்ள தேவனே, உம்மை அறிகின்ற அறிவின் மேன்மைக்காக வீண் வைராக்கியங்களை என்னை விட்டு நஷ்டமும் குப்பையும் என அகற்றி, உமக்குப் பிரியமான வாழ்க்கை வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 3:8