புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 04, 2020)

தாழ்மையுள்ள மனதையுடையவர்கள்

சங்கீதம் 103:11

பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது.


ஒருவனால் கலியாணத்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே. உன்னிலும் கனமுள்ளவன் ஒரு வேளை அவனால் அழைக்கப்பட்டிருப்பான். அப்பொழுது உன் னை யும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து: இவருக்கு இட ங்கொடு என்பான்; அப்பொழுது நீ வெட்கத்தோடே தாழ்ந்த இடத்திற் குப் போகவேண்டியதாயிருக்கும். நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, போய், தாழ்ந்த இடத்தில் உட்காரு. அப்பொ ழுது உன்னை அழைத்தவன் வந்து: சிநேகிதனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனே கூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன் பாக உனக்குக் கனமுண்டாகும். தன் னைத் தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ் த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்று இயேசு தம்முடைய சீ~ர்களுக்கு தாழ் மையின் மேன்மையை குறித்து அறி வுரை கூறியிருக்கின்றார். மேலும் தாழ் மையையும் பெருமையையும் குறித்து வேதத்திலே பல வார்த்தை கள் தரப்பட்டுள்ளன. “மனு~னுடைய அகந்தை அவனைத் தாழ் த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்.” “கர்த்தர் உயர்ந்தவ ராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்; மேட்டிமை யானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்.” “கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.” இப் படியாக தாழ்மையின் மனதையுடைய பாக்கியம் பெற்றவன். அவன் கிறிஸ்துவுக்குள் ஐசுவரியவானாக இருக்கின்றான். தேவனுக்கு பயந்து அவர் வழிகளுக்கு தன் இருதயத்தை ஒப்புக் கொடுக்கின்றவன் பெரும் கிருபையை பெற்றவனாக இருக்கின்றான். இந்த உலகத்தின் அளவுகோலின்படி திரவிய சம்பத்துள்ளவனாக இருந்தாலும், அவன் உள்ளத்தில் பெருமை இருக்குமாயின் அவன் பார்வை மேட்டிமை அடையும். அவன் தாழ்மையை குறித்த மனதில்லாத ஏழையாக இருப்பான். இந்த உலகத்தின் அளவுகோலின்படி ஏழையாக இருந் தாலும், தேவ சமுகத்திலே தன்னைத் தாழ்த்துகின்றவன், தேவனு டைய பிரமாணங்களுக்கு தன்னை ஒப்புக் கொடுக்கின்றான். அவன் நித்தியரின் கிரு பையை பெற்றதால், அழியாத பெரும் பொக்கி~ த்தை தனதாக்கி கொண்டவனாக இருக்கின்றான்.

ஜெபம்:

உன்னதமான தேவனே, நான் எப்போதும் என் வாழ்வில் தாழ்மை யின் சிந்தையை தரித்தவனாக, உமக்குப் பயந்து உம்முடைய பெரும் கிருபையை மேன்மை படுத்துகின்றவனாக வாழ என்னை உணர்வுள்ள வனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 18:9-14