புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 03, 2020)

நிம்மதியான வாழ்க்கையை அடையும் வழி

யோவான் 14:27

சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்;


வெளிநாட்டிலிருந்து தன் ஊருக்குத் திரும்பிய தந்தையார், தன் மகனுக்கென்று மிகவும் உச்சிதமான எவ்விதமான கடும் காலநிலையை யும் தாக்குப் பிடிக்கக்கூடிய கிற்றார் (புரவையச) வாத்தியக் கருவியொன்றை அன்பளிப்பாகக் கொண்டு வந்தார். பல வருடங்கள் கடந்து சென்றும் அதன் அமைப்பிலோ, ஒலிக்கும் சுரங்களிலோ எந்த பழுதும் ஏற்படவில்லை. மகனானவனும்;, தான் வாழும் கிராமத்திலே பெற்றுக் கொள்ள முடியாத உச்சிதமான அந்தக் கிற்றாரை அருமையாக பேணிப் பாதுகாத்து வந்தான். எங்கள் இரட்சகராகிய இயேதா மே இந்தப் பூவுலகில் இருந்த நாட்க ளிலே, அவரின் திருப்பணி முடிவுக்கு வரும் நாட்கள் நெருங்கிய போது, நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உல கத்திற்கு வந்தேன்; மறுபடியும் உலகத் தைவிட்டு பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்றார். பரலோகத்திலே இருந்து புறப்பட்டு வந்த இயேசு தான் மறுபடியும் பரமேறும் முன் பாக, தன்னிடத்திலிருந்த பரலோகத்திற்குரிய சமாதானத்தை தம்மு டைய சீஷர்களுக்கு விட்டுச் சென்றார். உலகத்தினால் உண்டாகும் எந்த சூழ்நிலைகளாலும் குலைக்கப்பட முடியாத பரலோக சமாதானம் அவரிடம் இருந்தது. இந்த உலகம் முழுவதும் கலங்கிப் போனாலும் அந்த சமாதானம் மாறிப்போவதில்லை. ஏனெனில், அந்த சமாதானம் இந்த உலகத்தினால் உண்டாயிருக்காமல், தேவனால் உண்டான சமா தானமாக இருக்கின்றது. அந்த சமாதானம் தேவன் வாசம் செய்யும் இடத்தில்; நிலைத்திருக்கும். ஒருவன் இயேசு கூறிய வார்த்தைகளை கைகொள் வானாக இருந்தால், அவனிடத்தில் தேவன் வாசம் பண்ணுவார். பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன் உங்கள் வாழ்விற்கு தேவையான எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, இயேசு சொன்ன வார்த்தைகளை உங்களுக்கு நினைப் பூட்டுவார். இந்த உல கத்திலுள்ள அழிந்து போகின்ற உச்சிதமான பொருட்களை மனிதர்கள் அருமையாக பேணிப் பாதுகாத்துக் கொள்கின்றார்கள். அப்படியா னால், இந்த உலகத்தினாலும், அதில் வாழும் மனிதர்களுடைய கிரி யைகளினாலும் பெறமுடியாததும், இந்த உலகத்தினாலும், அதில் வாழும் மனிதர்களுடைய கிரியைகளினாலும் அழிந்து போகாததுமான அதி மேன்மையுடையதுமான மாறாத பரலோக சமாதானத்தை நாங்கள் இன்னும் அதிக கருத்துடன் காத்துக் கொள்ளுவோம்.

ஜெபம்:

பரலோக பிதாவே, உம்முடைய திருக் குமாரனாகிய இயேசு விட்டுச் சென்ற நிலையான பரலோக சமாதானத்தை காத்துக் கொள்ளு ம்படி உம்முடைய வார்த்தைகளின் வழியில் வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 11:28