புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 02, 2020)

தம்முடைய ஜனத்துக்கு ஆறுதல் செய்யும் தேவன்

ஏசாயா 49:13

வானங்களே, கெம்பீரித்து ப்பாடுங்கள்; பூமியே, களிகூரு; பர்வதங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர் த்தர் தம்முடைய ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்;. சிறுமைப்பட்டிருக் கிற தம்முடையவர்கள் மேல் இரக்கமாயிருப்பார்.


ஒரு காலகட்டத்திலே, தேவனாலே அழைக்கப்பட்ட ஜனங்கள், தங்கள் இருதயங்களை கடினப்படுத்தி, தங்கள் பிடரி நரம்பை இரும்பாக்கி, தங்கள் நெற்றிகளை வெண்கலமுமாக்கிக் கொண்டு, தேவனுடைய வழிகளைவிட்டு வெகு தூரம் சென்று தங்கள் வாழ்வை கெடுத்துக் கொண்டா ர்கள். தங்கள் கீழ்ப்படியாமையினால் தம்மை அழைத்த தேவனுக்கு விரோத மாக பாவம் செய்தோம் என்று உண ர்வடைந்த போது, கர்த்தர் எம்மைக் கைவிட்டார், ஆண்டவர் எம்மை மறந் தார் என்று சொல்லிக் கொண்டார்கள். என்றும் மாறாத அன்புள்ள கர்த்தரோ: “ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள் ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரை ந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப் போதும் என்முன் இருக்கிறது. உன் குமாரர் தீவிரித்து வருவார்கள்; உன்னை நிர்மூலமாக்கினவர்களும் உன்னைப் பாழாக்கினவர்களும் உன்னைவிட்டுப் புறப்பட்டுப்போவா ர்கள். உன் கண்களை ஏறெடுத்துச் சுற்றிலும் பார்; அவர்களெல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்தில் வருகிறார்கள்; நீ அவர்களெல்லாரை யும் ஆபரணமாகத் தரித்து, மணமகள் அணிந்துகொள்வதுபோல, நீ அவ ர்களை அணிந்துகொள்வாய் என்று, என் ஜீவனைக்கொண்டு சொல் லுகிறேன்” என்று உரைக்கிறார். ஒரு வேளை நீங்கள் தேவனுடைய சத்தத்தை கேளாமல் தூரம் சென்றிருந்தால், அவரிடம் திரும்புங்கள். கர்த்தர் என்னை மறந்தார் என்று சோர்ந்து போகாதிருங்கள். மனித ர்களோ தங்களை படைத்த மெய்யான தேவனை மறந்து போகின்ற வர்கள் ஆனால் தேவனோ மனிதர்களை நேசிக்கின்றார். ஒருவரும் கெட்டுப் போகாமல் பரலோகம் வந்து சேரும்படியாக அழைக்கின்றார். யாவர் மேலும் நீடிய பொறுமையுள்ளவராக இருக்கின்றார். கர்த்தர் தம்முடைய ஜனத்துக்கு ஆறுதல் செய்கின்றவர்;. சிறுமைப்பட்டிருக்கிற தம்முடையவர்கள் மேல் இரக்கமாயிருப்பார்.

ஜெபம்:

ஆறுதலின் தேவனே, உமக்கு வேதனை உண்டாக்கும் வழிகள் என்னிடத்தில் இருக்குமாயின், அவற்றை உணர்ந்து உம்மிடம் திரு ம்பும்படியாய் உணர்வுள்ள இருதயத்தைத் தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 139:23-24