புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 01, 2020)

நித்திய பலனைச் சேர்க்கும் ஒரு நாள் உண்டு

சங்கீதம் 73:24

உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.


நான் எந்த முயற்ச்சியை எடுத்தாலும் அதில் பெரும் விருத்தியை காண முடியாமல் இருக்கின்றதே, ஆனால் ஊரிலுள்ள தேவனை அறி யாமல் தங்கள் வழிகளில் நடக்கின்றவர்களின் கிரியைகளின் பலனை பாருங்கள், எவ்வளவு சீக்கிரமாயும் அதிகமாயும் இருக்கின்றது என்று தேவனை அறிந்த ஒரு மனிதன் கூறிக் கொண்டான். ஆம், சில வேளை களிலே எங்கள் வாழ்வின் அனுபவங் களும் அப்படியாகவே இருக்கி ன்றது. எங்களுக்கு மட்டுமல்ல, வேதத்திலு ள்ள சில பக்தர்களும் தங்கள் பெல வீன நேரங்களில் அப்படியாக சிந்தித் தார்கள். இதோ, இவர்கள் துன்மார் க்கர்; இவர்கள் என்றும் சுகஜீவிகளா யிருந்து, ஆஸ்தியைப் பெருகப்பண் ணுகிறார்கள். ஆனாலும் தாங்கள் காரி யம் அறியாத மூடர்களைப் போல சிந் தித்தோம் என்று உணர்ந்து கொண்டார்கள். (சங்கீதம் 73) அப்படி யான சிந்தனைகள் எங்களில் தோன்றும் வேளைகளிலே நாங்கள் இந்த உலகத்தின் மேன்மைகளை எங்கள் ஆசீர்வாதத்தின் அளவுகோலாக எண்ணிக் கொள்கின்றோம். ஒரு மனிதன் தன் கண்போன வழிகளிலே வாழ்ந்து கொண்டு, இந்த உலகத்தின் ஐசுவரியத்தை திரளாக தனக்கு சேர்த்துக் கொண்டாலும், அவன் சர்வத்தையும் படைத்த இரட்சிப்பின் தேவனுடைய வழியிலே வாழாதபடியினாலே அவன் நேர்த்தியான நாற் றுகளை நட்டாலும், அந்நிய தேசத்துக் கன்றுகளை வைத்தாலும், பகற் காலத்திலே தன் நாற்றை வளரவும், விடியற்காலத்திலே தன் விதையை முளைக்கவும் பண்ணினாலும், அவன் தன் பலனைச் சேர்க்கும் நாளி லே துக்கமும் கடும்வேதனையுமே உண்டாயிருக்கும். இந்த உலகத் திலே நாங்கள் காணும் பலன்கள்; இறுதியானதும் முடிவானதும் அல்ல. அவைகள் அழிந்து போகின்ற தற்காலிகமான பலன்களே. அவை கள் எவ்வளவு மிகையாக ஒரு மனிதனிடத்தில் இருந்தாலும் அதனால் அவனுக்கு மனத் திருப்த்தி ஏற்படுவதில்லை. அவை கானல் நீரைப் போல மனிதனுடைய மனதை எப்போதும் அலையச் செய்யும். ஆனால் நித்திய பலனை சேர்க்கும் ஒரு நாள் உண்டு. அந்நாட்களி லே கர்த்தர் தாமே எம்மை தம்முடைய வழிகளிலே நடத்திச் செல்கின் றார். அவருடைய நாளிலே எங்களது சஞ்சலமும் தவிப்பும் ஓய்ந்து போகும், கர்த்தர் தாமே எங்களை தம்முடைய நித்திய மகிமையிலே சேர்த்துக் கொள்வார்.

ஜெபம்:

அழைத்த தேவனே, எனக்கோ, உம்மை அண்டிக்கொண்டிருப்பதே நலம், நான் உமது கிரியைகளையெல்லாம் சொல்லிவரும்படி எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களைத் தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 34:10