புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 29, 2020)

மற்றவர்களை புரிந்து கொள்ளுங்கள்

சங்கீதம் 119:169

உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும்.


தன் இளமைக் காலங்களில் இருந்து தன் பெற்றோரை நேசித்து வந்த பெண்மணி, தன்னையும் தன் தம்பிமாரையும் வளர்க்க, பெற்றோர் பல தியாகங்களை செய்திருக்கின்றார்கள் என்ற ஓரளவு உணர்வு அவளுக்குள் இருந்தது. ஆண்டுகள் கடந்து சென்று, தனக்கென்று ஒரு குடும்பம் வந்த பின்பு, தான் கடந்து போகும் ஒவ்வொரு நிலைக ளையும், அதன் பாடுகளையும் அனு பவ ரீதியாக கடந்து செல்லும் போது, தன் அம்மா அப்பா இவ்வளவாக தங்களுக்காக பிரயாசப்பட்டிருக்கின்றா ர்கள் என அவள் உள்ளத்திலே நன்றி பெருகிற்று. இது பெற்றோரின் கடந்த காலத்தைக் குறித்த உணர்வு. ஆனால், இப்போது பெற்றோர் வயோதிபத்தை அடைந்து கொண் டிருக்கின்றார்கள், ஆனால் அந்த மகளுக்கோ வயோதிபம் எப்படி இருக்கும் என்ற அனுபவம் இல்லாததால், பெற்றோரின் தற்போதைய நிலையை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. அதுபோலவே, நவீன மயமாக மாறிக் கொண்டிருக்கும் இந்த உலகிலே பிள்ளை களை வளர்க்க எவ்வளவு பிரயாசப்பட வேண்டும் என்பதை பெற்றோ ர்களும் மறந்து போய்விடுகின்றார்கள். தங்கள் மனைவியின் நிலையை முற்றாக உணராத கணவனும், கணவனுடைய நிலையை முற்றாக உணராத மனைவியும்;, ஆளுக்கு ஆள் பல உபதேசங்களை செய்து கொள்கின்றார்கள். கருப்பொருளாவது, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தி லே, குறிப்பிட்ட சூழ்நிலையிலே ஒரு மனிதன் தான் கடந்து போகும் பாதையை நாங்கள் முற்றாக உணர்ந்து கொள்ள முடியாது. அத னால் ஒருவரை ஒருவர் நியாயந்தீர்க்க முந்திக் கொள்ளக்கூடாது. இந் நிலையைக் குறித்து விழிப்புணர்வை நாங்கள் அடையும்படி பிரகாசமு ள்ள மனக் கண்களை தரும்படியாக தேவனை வேண்டிக் கொள்ள வேண்டும். முதலாவதாக மற்றவர்களுடைய உண்மையான நிலை மையை என்னால் முற்றாக புரிந்து கொள்ள, மனதார அறிந்து கொள்ள முடியவில்லை என்ற எண்ணம் எங்களுக்குள் வரவேண்டும். எல்லாக் காரியங்களும் எனக்கு தெரியும் என்று உடனுக்குடன் மறுவுத் தரவு கொடுக்காமல், கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்க கற்றுக் கொள்ள வேண்டும். இந்த அறிவிலே நாளுக்கு நாள் வளர வேண் டும். மற்றவ ர்களுடைய நிலைமையை உணர்ந்து கொள்ளும் உணர் வுள்ள இருதயத்தைத் தாரும் என தேவனிடம் நாம் கேட்க வேண்டும்.

ஜெபம்:

இருதயங்களை ஆராய்ந்து அறிகின்ற தேவனே, சூழ்நிலைகளை நிதானித்து அறிந்து, நான் உணர்வுள்ள இருதயத்தை கொண்டிருக்க, உம்முடைய தூய ஆவியின் வழிநடத்தலை தந்து நடத்துவீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கலாத்தியர் 6:2