புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 27, 2020)

பட்சமாய் நடந்து கொள்ளுங்கள்

1 தெச 2:7

உங்களிடத்தில் பட்ச மாய் நடந்துகொண்டோம்; பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல,


தேவ ஊழியராகிய பவுல் என்பவரின் இரண்டாவது சுவிசே~ பிர யாணத்தின் போது, அவரும் அவரோடு கூட இருந்த மற்றய ஊழி யர்களும் தெசலோனிக்கே என்ற பட்டணத்திற்கு சென்று மீட்பின் நற் செய்தியை அறிவித்தார்கள் “யூதர்களில் சிலரும், பக்தியுள்ள கிரே க்கரில் திரளான ஜனங்களும், கனம்பொருந்திய ஸ்திரீகளில் அநே கரும் விசுவாசித்து, பவுலையும் சீலா வையும் சேர்ந்துகொண்டார்கள்.” நற் செய்தி அறிவிப்பின் பிரதானமான நோக்கம், ஒருவரும் கெட்டுப் போகா மல் நித்திய ஜீவனை அடைய வேண் டும் என்பதாகும். இதை நன்றாக அறி ந்திருந்த ஊழியராகிய பவுல், தெச லோனிக்கே பட்டணத்திலே புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்டவர்களுடைய இரட்சிப்பு நிறைவேறத்தக்கதாக, தன் உயிரையும் தியாகமாக கொடுக்க ஆயத்தமாக இருந்தார். மனி தர்களால் உண்டாகும் மகிமையை அவர் தேடவில்லை. அந்த ஜன ங்களுக்கு எந்த விதத்திலும் பாரமாக இருக்கவும் விரும்பவில்லை. அவர்களிடத்தில் பட்சமாய் நடந்து, பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல, தெசலோனிக்கேயிலுள்ள புதிய விசுவாசிகள்மேல் வாஞ்சையாயிருந்து, தகப்பன் தன் பிள்ளைக ளுக்குச் சொல்லுகிறதுபோல, அவர்களில் ஒவ்வொருவனுக்கும் புத்தி யையும் தேறுதலையும் எச்சரிப்பையும் சொல்லி வந்தார். தேவ ஊழி யராகிய பவுல் தான் கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை பின்பற்றுவதைப் போலவும், கிறிஸ்துவின் அச்சடையாளங்களை தன்னில் தரித்திக் கொண்டிருக்கின்றதைப் போலவும், நீங்களும் என்னைப் பின்பற்று ங்கள் என்று அறிவுரை கூறியிருக்கின்றார். அதாவது, இந்த அறிவுரை ஊழியர்களுக்கு மட்டுமல்ல, கிறிஸ்துவுக்குள் தேறினவர்கள் யாவரும் இந்த சிந்தையோடே இருக்க வேண்டும். எச்சரிப்பு, கண்டிதம், ஒழு க்கம் யாவும் உண்டு. ஆனால் அவை யாவற்றிற்கும் மேலாக, புதி தாய் பிறந்த குழந்தை வளர்ந்து தேறும்வரைக்கும், ஒரு தாய் எப்படி அந்த குழந்தையை காப்பாற்றுகின்றாளோ, நாங்களும் புதிதாய் சேர் த்துக் கொள்ளப்பட்டவர்கள் மேல் பட்சமாய் நடந்து கொண்டு, அவ ர்கள் கிறிஸ்துவை அறிகின்ற அறிவில் வளர்ந்து பெருகும்படிக்கு அவர்கள் மேல் நீடிய பொறுமையுள்ளவர்களாக இருந்து, அவர்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்திச் செல்ல வேண்டும்.

ஜெபம்:

அன்புள்ள பிதாவே, நீர் என்மேல் காட்டி வருகின்ற அன்பு அளவற்றது. அது போல நானும் மற்றவர்கள்மேல் தயவாயும் பட்சமாயும் நடந்து கொள்ள என்னை உணர்வுள்ளவனா(ளா)க்குவீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 3:15