புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 24, 2020)

தேவ ஆலோசனைகளுக்கு கீழ்ப்படியுங்கள்

1 தெச 5:12

அன்றியும், சகோதரரே, உங்களுக்குள்ளே பிரயாசப்பட்டு, கர்த்தருக்குள் உங்களை விசாரணை செய்கிறவர்களாயிருந்து, உங்களுக்குப் புத்திசொ ல்லுகிறவர்களை நீங்கள் மதித்து,


“ஒரு வாலிபன் நெடுஞ்சாலையிலே தன் வாகனத்தை அதி வேகமாக ஓட்டிச் சென்றதன் நிமித்தமாக பொலிசார் அவனை தடுத்து நிறுத்தி, சட்டப்படி செலுத்த வேண்டிய அபராதத்தை வழங்கினார்கள். குடும்ப வைத்தியரிடம் பரிசோதனைக்காக சென்ற தாயார் ஒருவருக்கு, சில நோயின் அறிகுறி தெரிவதாகவும், அந்த நோயிலிருந்து தப்பித்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று அறிவுரைகளைக் கூறி, சில மரு ந்துகளையும் வைத்தியர் வழங்கினார். பாடசாலையொன்றிலே, தன் பாடங் களை ஒழுங்காக கற்காமலும், வீட்டு வேலைகளை செய்யாமலும் இருந்த மாணவன் ஒருவனை வகுப்பு ஆசி ரியர் கண்டித்துப் பேசினார்.” இவை யாவும் இந்த உலகிலே பாதுகாப்பாக, சுகமாக, செழிப்பாக வாழ்வதற்கு ஏற் படுத்தப்பட்டிருக்கும் ஒழுங்கு முறை கள். நல்வாழ்வை விரும்பும் எந்த மனிதனும்; மேற்கூறியவைகளைக் குறி த்து எந்த ஆட்சேபனையையும் தெரி விப்பதில்லை. நாங்களும் இந்த ஒழுங்குகளை கடைப்பிடிப்பதற்கு எதிர்த்து நிற்பதில்லை. பரலோக யாத்திரிகளாக கொஞ்சக் காலம் இந்த பூமியிலே வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களுக்கு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே பிரதான மேய்ப்பனாக இருந்து, எங்கள் ஆன்மீக வாழ்வை நாங்கள் கெடுத்துப் போடாதபடிக்கு எங்களை வழிநடத்திச் செல்கின்றார். தம்முடைய பணியை நிறைவேற்றும்படிக்கு மேய்ப்ப ர்களையும் உதவி ஊழியர்களையும் சபையில் ஏற்படுத்தியிருக்கி ன்றார். எங்கள் ஆத்துமா அழிந்து போகாதபடிக்கு, சில வேளைக ளிலே, தேவ பிரமாணங்களை மீறும் போது பொலிசாரைப் போலவும், ஆன்மீக நோயின் அறிகுறிகள் தென்படும் போது வைத்தியரைப் போலவும், வாழ்வின் வழிகளை கற்றுக் கொடுக்கும் போது ஆசிரி யரைப் போலவும் மேய்ப்பர் செயற்படுகின்றார். இது என் தனிப்பட்ட வாழ்வு என்று சொல்லி உங்கள் இருதயத்தை கடினப்படுத்தாமல், தேவ ஆலோசனைகளுக்கு கீழ்ப்படியுங்கள். உங்களுக்கு தேவ ஆலோசனைகளை கூறுகின்றவர்களை மதித்து, கிரியையினிமித்தம் அவர்களை மிகவும் அன்பாய் எண்ணிக்கொள்ளுங்கள். அப்படி செய்யும் போது கர்த்தர் உங்களில் பிரியமாய் இருப்பார்.

ஜெபம்:

வழிநடத்தும் நல்ல பிதாவே, எங்களை வழிநடத்தும்படி நியமி க்கப்பட்ட ஊழியர்களை மதித்து, அவர்கள் கூறும் தேவ ஆலோசனைகளுக்கு கீழ்ப்படியும் இருதயத்தை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தீமோ 5:20