புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 23, 2020)

நிறைவான வளர்ச்சியை நோக்கி

எபேசியர் 4:15

அன்புடன் சத்தியத்தைக் கைகொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்.


நாங்கள் ஒருமனதோடும் ஒற்றுமையோடும் இசைந்த ஆத்துமாக்க ளாய், பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை எங்கள் வாழ்வில் நிறை வேற்ற வேண்டும் என்னும் அறிவுரையோடு மட்டும் நின்றுவிடாமல், அதை நிறைவேற்றி முடிக்க தேவையான யாவற்றையும் பிதாவாகிய தேவன் தாமே அனுக்கிரகம் செய்திருக்கின்றார். எங்களோடு, எங் களுக்குள் என்றென்றும் வாசம்பண் ணும்படிக்கும், எல்லா வேளைகளிலும் எங்களை வழிநடத்திச் செல்லும்படிக் கும், தேற்றரவாளராகிய தூய ஆவி யானவரை எங்களுக்கு ஈவாக கொடு த்திருக்கின்றார். இயேசு கிறிஸ்து எப் படியாக இந்த உலகத்திலே வாழ்ந்து காட்டினாரோ, அத்தகைய நிறைவான வளர்ச்சியடையவும், கிறிஸ்துவின் நற் செய்தியை அறிவிக்கும்படிக்கும், சபை யானது பக்திவிருத்தியடையும்படிக்கு, தேவன்;தாமே, சிலரை அப்போஸ்தல ராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசே~கராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார். கிறிஸ்து வின் நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணமடையும்படிக்கு, தூய ஆவியானவர் எங்களோடு இருக்கின்றார், கிறிஸ்துவின் சரீர மான சபையில் அங்கத்தவர்களாக இருக்கும் நாங்கள் பக்திவிரு த்தியடையும்படிக்கு ஊழியர்களை கொடுத்திருக்கின்றார். நாங்கள் ஒரு ஆவிக்குரிய சபையில் அங்கத்தவராக இணைந்து கொள்ளும்படி தீர்மானம் எடுத்தபின்பு, அவ்விடத்திலே, பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும், மேய்ப்பர் வழியாக தேவன் கூறும் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிய வேண்டும். நாங்கள் கலகங்களுக்கும் பிரிவினைகளுக்கும் காரணராக இருக்கக்கூடாது. ஒருவருக்காக ஒருவர் ஜெபிப்பதிலும், ஒருவரை ஒருவர் மன்னிப்பதிலும் முந்திக் கொள்ள வேண்டும். தேவன் எங்கள் மேல் நீடிய பொறுமையுள்ளவராக இருக்கின்றார். மனு~ருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போத கமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அங்கு மிங்குமாக அலைகிறவர்களாயிராமல், நானே எனக்கு மேய்ப்பன் என்ற எண்ணத்தோடு வாழாமல், அன்புடன் சத்தியத்தைக் கைக் கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலும், அவருடைய சாயலிலே வளர்ந்து பெருகுவோம்.

ஜெபம்:

அன்பின் தேவனே, சபை பக்கதிவிருத்தியடையும்படிக்காய், உம்முடைய வார்த்தையின்படி நான் கீழ்ப்படிவுள்ளவனா(ளா)க சாட்சியுள்ள வாழ்க்கை வாழ என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தெச 5:15-17