புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 21, 2020)

இக்கட்டும் நெருக்கமும் நம்மைச்சூழ்ந்து கொள்ளும் போது

1 சாமுவேல் 30:6

தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.


தாவீது என்னும் இளைஞனை கொன்று போடும்படி, அவனுடைய தேசத்தின் ராஜா அவனை பின்தொடர்ந்த நாட்களிலே அவன் மலை களிலும், கெபிகளிலும், வனாந்தரத்திலும் தன்னோடு இருந்த ஜனங்க ளோடும் வாசம் செய்து வந்தான். ஒரு சமயம், தாவீதும் அவனோடி ருந்த புரு~ர்களும் இல்லாத போது, அமலேக்கியர் அங்கே வந்து, அங்கிருந்த ஸ்திரீகளையும் சிறியவர் களையும் பெரியவர்களையும் சிறைப் பிடித்து, தங்கள் வழியே போய் விட்டார்கள். தாவீதும் அவன் மனு~ ரும் அந்தப் பட்டணத்திற்கு வந்த போது, இதோ, அது அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், தங்கள் மனைவிகளும் தங்கள் குமாரரும் தங் கள் குமாரத்திகளும் சிறைபிடித்துக் கொண்டுபோகப்பட்டார்கள் என் றும் கண்டார்கள். அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த ஜனங்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள். தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; சகல ஜனங்களும் தங்கள் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், தாவீதைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்; தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான். பிரியமானவர்களே, இதற்கொத்ததான இக்கட்டான சூழ்நிலைகள் மனிதர்களுடைய வாழ்க்கையில் உண்டாகும் போது, பதற்றமடைந்து, தங்கள் கோபத்தை தீர்க்கும்படி, தங்கள் உணர்வுகளின்படி சண்டைக ளையும் கலவரங்களையும் ஆரம்பித்து விடுகின்றார்கள். ஆனால் தேவ மனு~னாகிய தாவீதோ, கர்த்தரை நோக்கி: நான் அந்தத் தண் டைப் பின் தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா? என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின் தொடர்; அதை நீ பிடித்து, சகலத்தையும் திருப்பிக்கொள்வாய் என்றார். அதன்படியே, தேவனுடைய அனுக்கிர கம் அவனோடு இருந்ததால், அவன் அமலேக்கியரை முறியடித்து இழ ந்து போன யாவற் றையும் மீட்டுக் கொண்டான். இப்படியாக எங்கள் வாழ்வின் இக்க ட்டான சூழ்நிலைகளை எப்படி ஜெயிக்க முடியும் என்று, வேததத் திலே மேகம் போன்ற திரளான சாட்சிகள் உண்டு. எனவே வேதத்தை தினமும் வாசியுங்கள், வேத வார்த்தைகளின் வழியாக தேவன் உங்களை வழிநடத்திச் செல்வார்.

ஜெபம்:

வழிநடத்தும் வல்ல தேவனே, இக்கட்டும் நெருக்கமும் என்னைச் சூழ்ந்து கொள்ளும் போது, உம்முடைய பிரமாணங்களை பற்றிக் கொள்ளும் இருதயத்தை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 12:1