புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 20, 2020)

வாழ்க்கையின் தீர்மானங்கள்

யாக்கோபு 4:15

ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்.


குடிவரவு, குடியகழ்வு போன்ற நிகழ்வுகள் இன்றைய உலகிலே அதிகதிகமாக நடைபெற்று வருகின்றது. சிலர் தங்கள் சொந்த விருப்பத்தின்படி தாங்கள் குடியிருக்கும் தேசத்தைவிட்டு இன்னுமொரு தேசத்திற்கு செல்கின்றார்கள். வேறு சிலர் பல சூழ்நிலைகள் கார ணமாக வேறு தேசங்களுக்குச் செல்வதற்கு நிர்பந்திக்கப்படுகின்றா ர்கள். இவ்வண்ணமாக, பல காரணங் களுக்காக ஒரு ஊரை விட்டு இன்னு மொரு ஊருக்கும் ஒரு வீட்டைவிட்டு இன்னுமொரு வீட்டிற்கும், ஒரு வேலை யைவிட்டு இன்னுமொரு வேலைக்கும், ஒரு பாடசாலையை விட்டு இன்னு மொரு பாடசாலைக்கும் செல்கின்றார் கள். பலர் இப்படியாக வாழ்க்கையை மாற்றியமைக்கும் நிகழ்வுகளை, சற் றும் சிந்திக்காமல், தேவனுடைய சித் தம் என்ன என்பதை அறியாமல், துரி தமாக தீர்மானிக்கின்றார்கள். இவைகளினால் பல எதிரடையான பின்விளைவுகளை எதிர்நோக்குகின்றார்கள். இவைகளின் மத்தியில் தேவனை நோக்கிப் பார்க்கும்போது, அவர் அவர்களுடைய மீறுத ல்களுக்கு தக்கதாக நீதியை சரிக்கட்டாமல், தம்முடைய இரக்கத்தின் நிமித்தம் விடுதலை அளிக்கின்றார். மெய்யான தேவன் யார் என்று அறிந்த பின்பும், நாங்கள் திரும்பத் திரும்ப மெய்யான தேவனை அறியாதவர்கள் போல, எங்கள் சொந்த உணர்வுகளின்படி வாழ்வின் தீர்மா னங்களை எடுக்கக்கூடாது. “மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒருவ ரு~ம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம்பண்ணுவோமென்கி றவர்களே, கேளுங்கள். நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரி யாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற் போகிற புகையைப்போலிருக்கிறதே. ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னி ன்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்” என்று பரிசுத்த வேதாகமம் எங்களுக்கு அறிவுரை கூறுகின்றது. எனவே, தேவன் எங் கள் வாழ்க்கையைக் குறித்து ஒரு அழகான திட்டத்தை வைத்திருக் கின்றார் என்பதை உணர்ந்து, எந்த ஒரு திட்டத்தையும் முன்னெடுத்துச் செல்ல முன்பு, பொறுமையோடு தேவனுடைய சமுகத்திலே ஜெபத் திலே தரித்திருந்து தேவ சித்தத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

ஜெபம்:

பரலோக தேவனே, என் வாழ்வில் எந்த தீர்மானங்களை எடுக்கும் முன்பும், உம்முடைய சித்தத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்னும் உணர்வுள்ள இருதயத்தைத் தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 சாமு 30:6-8