புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 17, 2020)

பொறுமையாய் இருங்கள், சேனைகளின் கர்த்தர் உங்களோடு இருக்கின்றார்

ஏசாயா 54:17

உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்.


கர்த்தர் யோசேப்புக்கு முன் குறித்த நாள் வந்தபோது, சிறைச்சா லையிலிருந்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனை சந்திக்கும்படிக்கு அரண்மனைக்கு கொண்டு போகப்பட்டான். எகிப்திலும், எல்லா தேச ங்களிலும் ஏற்படவிருக்கும் கொடிய பஞ்சத்தை, தேவன்தாமே யோ சேப்பு வழியாக பார்வோனுக்கு வெளிப்படுத்தினார். அதை மேற் கொள்ள வேண்டிய ஞானத்தையும் யோசப்புக்கு தேவன்தாமே கொடு த்திருக்கின்றார் என்பதை உணர்ந்த பார்வோன், யோசேப்பை எகிப்து தேச மனைத்திற்கும், தனக்கு அடுத்த அதி காரியாக ஏற்படுத்தினான். சற்று சிந்தி த்துப் பாருங்கள்! இளமைக் கால த்திலே வீட்டிலே துன்பம் ஏற்பட்டது. எகிப்திலே அநாதரவாக வேலை செய் யும் இடத்திலே செய்யாத குற்றத்தி ற்காக தண்டனையை பெற்றுக் கொண்ட யோசேப்பு, பொறுமையோடு தேவனைப் பற்றிக் கொண்டிருந்தான். தேவனாகிய கர்த்தர் முன்கு றித்த திட்டம் அவன் வழியாக நிறைவேறும்படிக்குக் காத்திருந்தான். அவன் கர்த்தரிலே நிலைத் திருந்தபடியால், கர்த்தர் அவனோடு இரு ந்தார். ஈற்றிலே அவனுக்கு விரோதமாக, வீட்டிலும் வெளியிலும் உரு வாக்கப்பட்ட எல்லா ஆயுதங்களும் செயல் இழந்து போய்விட்டது. தன்னை அந்நியருக்கு விற்றுப்போட்ட சகோதரர்களின் வம்சங்கள் பூமியிலே ஒழியாமலிருக்கவும், அவர்களை ஆதரிக்கிறதற்காகவும், பெரிய இரட்சிப்பினால் அவர்களை உயிரோடே காப்பதற்காகவும் தேவனின்; கரத்தில், யோசேப்பு அருமையான பாத்திரமானான். தேவ னுடைய வார்த்தை வல்லமையுள்ளது. அதை இறுகப் பற்றிக் கொள் ளுங்கள். அந்த வார்த்தையிலே நிலைத்திருங்கள். பிதாவாகிய தேவ னுடைய சித்தம் உங்களில் நிறைவேறத்தக்கதாக இடங் கொடுங்கள். எதிர்ப்புக்கள், ஏளனங்களைக் கண்டு மனம் சோர்ந்து போய்விடாதி ருங்கள். தேவன் வைத்த எல்லையைத் தாண்டி சென்றுவிடாதிருங்கள். வீட்டிலோ, வேலை செய்யும் இடங்களிலோ, வெளியிடங்களிலோ, எங்கு இருந்தாலும், பரிசுத்த வாழ்வை சமரசம் செய்யாதிருங்கள். சேனைகளின் கர்த்தர் உங்களோடு இருந்;தால், நாங்கள் இந்த உலகத்திலே வாழ்ந்தாலும், இந்த உலக த்தை விட்டு கடந்து சென்றாலும் நாங்கள் அவரோடேகூட இருப்போம்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, என்னைக் குறித்த உம்முடைய திட்டம் என்னில் நிறைவேறும்படிக்கு, எந்த சூழ்நிலையிலும் நான் உம் வார் த்தையை பற்றிக்கொண்டு பொறுமையாக காத்திருக்க கிருபை செய் வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஆதியாகமம் 45:5-7