புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 16, 2020)

அநியாயங்களுக்கு உடன்படாதிருங்கள்

ஆதியாகமம் 39:9

இப்படியிருக்க, நான் இத் தனை பெரிய பொல்லா ங்குக்கு உடன்பட்டு, தேவ னுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான்.


நாங்கள் வேலை செய்யும் இடங்களிலே எங்களுக்கு ஆதரவான சூழ் நிலைகள் இருப்பதையே நாங்கள் யாவரும் விரும்புகின்றோம். ஆனால், அங்கே பல சவால்களும், எதிர்ப்புக்களும் ஏற்படுவதுண்டு. அவ்விடங்களிலே சில வேளைகளிலே, சக ஊழியர்களினாலோ அல் லது அதிகாரத்திலுள்ளவர்களாலோ செய்யப்படும் அநீதியான செயல் கள் நம்மை பாதிப்படையச் செய்கின் றது. இதனிமித்தம் நாங்கள் எந்த கார ணம் கொண்டும் பாவமான செயல்களு க்கு உடன்படலாகாது. அநியாயங்களு க்கு பங்காளிகளாக மாறிவிடக் கூடாது. அந்நிய தேசத்திலே வேலை செய்து வந்த இளைஞனாகிய யோசேப்பு ஒரு பெரிதான பயங்கரத்தை எதிர்நோக்க வேண்டியதாகயிருந்தது. யோசேப்பின் எஜமானனின் மனைவி யோசேப்பின் மேல் கண்போட்டு, தன்னோடு கூட பாவம் செய்யும்படி அவனை அழைத்தாள். ஆனால் யோசேப்போ, பின்விளைவுகள் எதைக் குறித்தும் அஞ்சாமல், பாவத்திற்கும் துரோ கத்திற்கும் சற்றும் உடன்படாமல் தன் வாழ்;க்கையை தூய்மையாகக் காத்துக் கொண்டான். எஜமானனின் மனைவி, யோசேப்பு தன் திட்டத் திற்கு உடன்படாததால், அவன்மேல் கோபம் கொண்டு, அவனுக்கெ திராக பொய் குற்றச்சாட்டை உண்டுபண்ணி. அவன் செய்யாத குற்ற த்திற்காக, அவனை சிறைச்சாலையிலே போடுவித்தாள். நாம் வேலை செய்யும் இடங்களிலே, ஒருவேளை யோசேப்பை போன்ற சூழ்நிலை கள் நமக்கு ஏற்படாதிருந்தாலும், வேறுபட்ட அநியாயங்களும் பாவ ங்களும் செய்யக் கூடிய சூழ்நிலைகள் ஏற்படலாம். இன்றைய நாட் களிலே பல மனிதர்கள், வேலை போய்விடுமே என்று எண்ணி, தாங் கள் தேவன்பேரில் கொண்ட வைராக்கியத்தை சமரசம் செய்து விடுகி ன்றார்கள். சிங்கங் குட்டிகள் பட்டினி கிடந்து தாழ்ச்சியடைந்தாலும், கர்த்தரைத் தேடுபவர்களுக்கு ஒரு நன்மையும் குறைவுபடுவதில்லை என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. யோசேப்போ, உதவியற்ற அந்நிய தேசத்திலே, தேவநீதியின் நிமித்தம், தனக்குண்டாயிருந்த நல்ல வேலையை இழந்து, சிறைச்சாலையிலே வாழ்கின்றான். யோ சேப்பு தேவனுக்கு பயந்து வாழ்ந்ததனால், தேவன் அங்கே அவனோடு கூட இருந்தார். யோசேப்பைப் போல நாங்களும் வாழும்போது, தேவன் தாமே எங்களோடு இருந்து, எங்களையும் வழிநடத்திச் செல்வார்.

ஜெபம்:

நீதியின் தேவனே, யாரும் அறியாத சூழ்நிலைகளில், நான் உமக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 யோவான் 5:17-19