புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 14, 2020)

கர்த்தர் எங்ளோடு கூட இருக்கின்றார்

ஆதியாகமம் 39:2

கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரிய சித்தியுள்ளவனானான்;


யாக்கோபு என்னும் ஒரு மனிதனுக்கு பன்னிரண்டு குமாரர்கள் இருந் தார்கள். யாக்கோபின் முதிர்வயதிலே யோசேப்புத் தனக்குப் பிறந்த தினால், அவன் தன் குமாரர் எல்லாரிலும் யோசேப்பை அதிகமாய் நேசித்தான். யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்து வந்தான். அவனுடைய சகோதரர் எல்லோரிலும் அவனைத் தங்கள் தகப்பன் அதிக மாய் நேசிக்கிறதை அவன் சகோதரர் கள்; கண்டபோது, அவனோடே பட்ச மாய்ப் பேசாமல் அவனைப் பகைத் தார்கள். அந்நாட்களிலே யோசேப்பு இரண்டு சொற்பனங்களைக் (கனவு) கண்டான். அவைகளின் கருப்பொரு ளாவது, யோ சேப்பின் பெற்றோரும், அவன் சகோதரர்கள் யாவரும் தரைமட்டும் குனிந்து அவனை வணங்குவது போன்ற காட்சியைக் கண்டான். யோசேப்பு, தான் கண்ட சொற்பனங்களை கூறியபோது, அதன் கருப்பொருளினிமித்தம் அவன் தந்தை அவனைக் கடிந்து கொண்டான். அவன் சகோதரர் அவன்மேல் பொறாமை கொண்டார் கள்;. ஒரு நாள், தன் சகோதரர்கள் ஆடு மேய்க்கச் சென்ற போது, அவர்களை சுகம் விசாரிக்கும்படி, அவன் தந்தை அவனை அவர்க ளிடம் அனுப்பினார். அவன் சகோதரர்களோ, அவனைப் பிடித்து, அவ்வழியாக வந்த இஸ்மவேலருடைய கையிலே அடிமையாக விற் றுப்போட்டார்கள். பின்பு, ஒரு மிருகம் அவனைப் பீறிப் போட்டது என அவன் தந்தையிடம் அறிவித்தார்கள். பிரியமானவர்களே, தேவனாகிய கர்த்தர்தாமே, தம்முடைய சித்தம் நிறைவேறத்தக்கதாக ஒரு பெரி தான வேலைக்காக யோசேப்பை முன்குறித்திருந்தார். ஆனால் அவன் குடும்பத்தாரோ அவனுக்குத் தடையாக வந்தார்கள். அந்நாட்களிலே பலர் அடிமைகளாக விற்கப்பட்டார்கள் வாங்கப்பட்டார்கள். அவனை பாதுகாக்க வேண்டிய சொந்தக் குடும்பமே அவனுக்கு விரோதமாக செய்த செய்கையானது தாங்கமுடியாத மிகவும் வேதனை தரும் செயலாகும். எனினும் தேவன் முன்குறித்ததை யாரால் தடுக்க முடி யும்? தேவனுடைய கரம் யோசேப்போடே இருந்தது. எங்கள் சொந்த பந்தங்கள் காரணமின்றி பகைத்தாலும், சோர்ந்து போய் விடாதிரு ங்கள். எங்களை அழைத்த தேவன் எங்களோடு இருப்பதே எங்கள் வாழ்வின் மேன்மை. எனவே எங்களைச்; சூழ இருப்பவர்களால், வாழ்வில் வரும் இன்னல்களைக் கண்டு தளர்ந்து போகாமல், தேவனு டைய சித்தம் எங்களில் நிறைவேற பொறுமையோடு காத்திருப்போம்.

ஜெபம்:

வாக்கு மாறாத தேவனே, உம்முடைய பார்வையிலே நான் விசேஷித்தவன், நீர் என்னோடு கூட இருப்பதே என்னுடைய மேன்மை என்பதை உணர்ந்து கொள்ளும் பாக்கியத்தை தந்து நடத்துவீராக. இரட் சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 8:31