புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 13, 2020)

தேவ வசனத்தைக் கைக்கொள்வோம்

யோவான் 14:23

இயேசு: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான்,


ஒரு வாலிபன், அவன் உயர்கல்வி கற்கும் நாட்களிலேயே தம் பெற்றோருக்கு பொருளாதார ரீதியிலே பெரும் ஒத்தாசையாக இருந்து வந்தான். தன்னுடைய இ~;டப்படி, தனக்கு கிடைக்கும் ஒய்வு நேரங்களிலே, பகுதி நேரமாக வேலை செய்து, சம்பாதித்த பணத்தின் ஒரு பகுதியை தன் குடும்ப செலவிற்காக கொடுத்து வந்தான். ஊரிலும் அயலிலும் வெளிப் பார்வைக்கு அவன் மற்றய வாலிபர்க ளுக்கு ஒரு மாதிரியாக காணப்பட் டான். ஆனால், அவன் தன் பெற் றோருக்கு கீழ்ப்படியும் காரியத்திலே குறைவுள்ளவனாக இருப்பதால் பெற் றோர் மனவேதனை அடைந்தார்கள். பிரியமானவர்களே, இரக்கமும் கீழ்ப்ப டிவும் கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப் படையான அம்சங்கள். நாங்கள் விரு ம்பும் காரியங்களிலே மட்டும் கீழ்ப்ப டிவை காண்பித்து, நாங்கள் விரும்பாத காரியங்களிலே ஆலோச னைகளை தள்ளிவிட்டு அதிகாரங்களை பொருட்படுத்தாமல் வாழ்வது கீழ்ப்படிவு அல்லவே. தேவனுக்கு எதிராகப் பாவம் செய்யும்படி எந்த பெற்றோரோ அல்லது அதிகாரங்களோ பணிப்பதில்லை. குறிப்பிட்ட சில விதிவிலக்குகள் ஆங்காங்கே சிலருடைய வாழ்க்கையிலே இரு க்கலாம். அப்படியான சூழ்நிலைகளிலே தேவனுடைய வசனத்தையே கைக்கொள்ள வேண்டும் என நாங்கள் யாவரும் அறிந்திருக்கின்றோம். ஆனால் எங்கள் வாழ்க்கை முழுவதும் விதிவிலக்கு அல்ல. இன் றைய நாட்களிலே, அந்த வாலிபனைப் போல, சிலர் நல்ல செயற் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒருவரை ஒருவர் முந்திக் கொள்கின்றார்கள். மற்றவர்கள் நன்மையடையும்படி அதிக நேரத்தை அவைகளிலே செலவிடுகின்றார்கள். ஆனால் தங்களுக்கு நியமிக்க பட்ட அதிகாரங்களுக்கு தங்களுக்கு இ~;டமான காரியங்களில் மட் டுமே கீழ்படிவை காண்பிக்கின்றார்கள். இந்தத் தியானத்திலே, வாலி பனை ஒரு உதரணத்திற்காக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. நாங்கள் யாவரும் தேவனுடைய சித்தம் எங்களில் நிறைவேறும்படிக்கு அவரு டைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து அவற்றை கைக்கொள்ள வேண் டும். தேவன் நியமித்திருக்கின்ற சபையின் ஆளுகைக்கு கட்டுப்பட் டிருக்க வேண்டும். அப்படி நாம் கட்டுப்பட்டிருக்கும் போது, எங்கள் இருதயத்தை காண்கின்ற தேவன், நாம் அவரில் அன்பாய் இருக்கிறோம் என்பதை அறிவார்.

ஜெபம்:

இருதயங்களை ஆராய்ந்தறிகின்ற தேவனே, உம்முடைய வசனத்தின்படி நீர் நியமித்திருக்கும் சபையின் ஆளுகைகளுக்கு கீழ்ப்படியும்படி உணர்வுள்ள இருதயத்தை தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 சாமு 15:22