புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 12, 2020)

குறைவுகளை நிறைவாக்கும் தேவன்

1 தீமோத்தேயு 2:1

நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்


சோதோம் கொமோராவின் அக்கிரமம் பெரியதும் கொடியதுமாயி ருந்தது. அதனால் தேவன் அந்த பட்டணங்களை நியாயந்தீர்க்க சித்தம் கொண்ட போது, ஆபிரகாம் என்னும் தேவ தாசன், அந்த பட்டணங்களுக்காக பல தடவைகள் பரிந்து பேசி தேவனிடம் வேண்டிக் கொண்டார். இறுதியாக “பத்து நீதிமான்கள் அந்த பட்டணத்தில் இருந்தால் அவர்கள் நிமித்தம் அதை அழிப்பதில்லை என்று தேவன் கூறினார்;. ஆனால் சோதோம் கொமோராவில் பத்து நீதி மான்கள் கூட காணப்படவில்லை. நாம் கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தி னாலே அவர் வழியாக கிருபையி னாலே மீட்பைப் பெற்று நீதிமான்களா க்கப்பட்டிருக்கிறோம். இது தேவனால் உண்டான ஈவு. எனவே தேசத்திற்காக திறப்பின் வாசலிலே நின்று ஊக்கத் தோடே நாங்கள் ஜெபிக்க வேண்டும். “நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத் தியென்னவெனில், எல்லா மனு~ருக் காகவும் விண்ணப்பங்களையும் ஜெப ங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;. நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணு ம்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப் படியே செய்யவேண்டும். நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமு ன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது. எல்லா மனு~ரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.” என்று தேவ ஊழியராகிய பவுல் அறி வுரை கூறியிருக்கின்றார். ஆதலால் பிரியமான சகோதர சகோதரிகளே, தேசத்திலே நன்மை உண்டாகத்தக்கதாக, உலகத்திலுள்ளவர்கள் பேசும் அவிசுவாசத்தின் வார்த்தைகளை அறிக்கையிடாமல், விசுவாசத்தின் வார்த்தைகளை அறிக்கை பண்ணி பரிந்து பேசி ஜெபிக்கக்கடவோம். அதிகாரத்திலுள்ளவர்கள் மத்தியில் உள்ள குறைகள் யாவையும் கர்த் தர் நிறைவாக்க வல்லமையுடையவர். காரிருள் தேசத்தை மூடிகொள் ளாதபடி, ஒளிவீசும் சுடர்களாக எழுந்து பிரகாசியுங்கள். கர்த்தர் நீங்கள் வாழும் தேசத்தை ஆசீர்வதிப்பார்.

ஜெபம்:

உண்மையுள்ள தேவனே, உம்முடைய வார்த்தையின்படியே நாங்கள் தேசத்தின் இருள் நீங்கும்படியாய் விசுவாச அறிக்கை செய்து ஜெயமெடுக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 13:1-7