புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 11, 2020)

சர்வத்தையும் ஆளும் சர்வவல்லவர்

தானியேல் 4:37

ஆகையால் நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி, மகிமைப்படுத்துகிறேன். அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாய முமானவைகள். அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் என்று எழுதி னான்.


எரேமியா என்னும் தீர்க்கதரிசியின் நாட்களிலே, தேவனாலே தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்களின் அக்கிரமம் மிகுதியாய் பெருகிற்று. அநேக வருடங்களாக அவர்கள் எச்சரிக்கப்பட்டும் மனந்திரும்ப மனதில்லாமல் தங்கள் பொல்லாத வழிகளிலே வாழ்ந்து வந்தார்கள். அந்த ஜனங்கள் உணர்வடையும்படிக்கு, தேவன்தாமே, அந்த தேசத்தை நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவின் கையிலே கொடு த்தார். (ஏரேமியா 27:6). அந்த ராஜா, உண்மையான தேவன் யார் என்பதை இன்னும் அறியாமல் விக்கிரகங்களை வழிபட்டுக் கொண்டு வந்த நாட்களிலேயே, அவனுக்கு மிகுந்த வல்ல மையை தேவன் கொடுத்திருந்தார். யூதா கோத்திரத்தின் புத்திரராகிய தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்னும் இளைஞர்கள் நேபு காத்நேச்சாரினால் சிறைப்பிடிக்கப்பட்டு பாபிலோனுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். இந்த இளைஞர்களோ அந்நிய தேசத்திலே, தேவனை அறியாத ஜனங்கள் மத்தியிலே வாழ்ந்த போதும், எந்த விதத்திலும் எதிலும் சமரசம் பேசாமல், தங்கள் சாட்சியுள்ள வாழ்க்கையை யாவர் முன்னிலையிலும் காத் துக் கொண்டார்கள். இந்த நான்கு இளைஞர்கள் வழியாக உண்மையான தேவன் யார் என்பதை நேபுகாத்நேச்சாருக்கு தேவனாகிய கர்த்தர் வெளிப்படுத்தினார். பிரியமானவர்களே, இந்தப் பூமியும் அதன் நிறைவும் அதன் குடிகளும் கர்த்தருடையது. அவருடைய ஆளுகைக்கு மேற்பட்ட அதிகாரங்கள் ஒன்றுமில்லை. அந்த நான்கு இளைஞர்கள் வழியாக, தானே உண்மையான தேவனெ ன்பதை வெளிப்படுத்திய தேவனாகிய கர்த்தர் என்றென்றும் சர்வ வல்லமையுள்ளவராக இருக்கின்றார். எனவே, நாங்களும் அந்த இளைஞர்களைப் போல தேவனுடைய வழிகளிலே சமரசமற்ற சாட்சி யான வாழ்க்கை வாழும் போது, எங்கள் வழியாக, யார் உண்மையான தேவன் என்பதை ஆளுமைமிக்க அதிகாரிகளும்; அறிந்து கொள்வார் கள். எங்கள் தேவன் தேசத்தில் நன்மைகளை பெருகச் செய்வார்.

ஜெபம்:

பராக்கிரமமுள்ள தேவனே, உம்முடைய ஆளுகைக்கு மேற்பட்ட அதிகாரங்கள் ஒன்றுமில்லை என்பதை நான் உணர்ந்து, உம்முடைய வழிகளிலே சாட்சியாக வாழ என்னை பெலப்படுத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தீமோ 6:15-16