புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 07, 2020)

மனத்தாழ்மையுடன் பணி செய்யுங்கள்

பிலிப்பியர் 2:3

ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.


ஒரு ஊரிலே வசித்து வந்த ஒரு மனிதனும் அவன் குடும்பமும், அவர்கள் வாழும் சமுதாயத்திற்கு பெரும் ஒத்தாசையாக இருந்து வந்தார்கள். ஏழை எளியவர்களுக்கு தாராளமாக தான தர்மம் செய்து வந்தார்கள். சில ஆண்டுகளுக்கு பின், அந்த ஊரிலே புதிதாக குடி யேறிய வேறு ஒரு ஸ்தாபனத்தைச் சார்ந்த மனிதர்கள் சிலர், இலவச கல்வி மருத்துவ வசதிகளை அந்த ஊரிலுள்ள வறியவர்களுக்கு வழங்கினார்கள். இதை அறிந்து கொண்ட மற்றய மனிதனின் மகன் தன் தந்தையை நோக்கி: “அப்பா நாங்கள் அல்லவா முதலில் இந்த உதவிகளை ஆரம்பித்தோம், இப்போது எங்களைச் சாராத வேறு மனிதர்களும் எங்கள் அனுசரணையில்லாமல் உதவி களை வழங்குகின்றார்களே” என்று கூறி னான். அதற்கு அவன் தந்தை: “மகனே, இந்த ஊரில் அநேகர் பல தேவைக ளோடு வாழ்கின்றார்கள். அவர்கள் யாவரின் தேவைகளையும் முற்றும் முழுதாக எங்களால் செய்வதற்கு எங் களுக்குத் திராணியில்லை. நன்மை யான நோக்கத்தோடு மற்றவர்கள் செய்யும் உதவிகளை நாங்கள் நல் மனதுடன் வரவேற்க வேண்டும். எங்கள் நோக்கம், எங்கள் குடும்பத்தின் பெரு மையல்ல, இந்த ஊரில் வாழும் ஜனங்களின் தேவைகள் சந்திக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் பிரதான நோக்கம்” பிரியமானவர்களே, என்னூடாக அல்லது எங்கள் குடும்பம் வழியாக அல்லது எங்கள் சபை வழியாக மாத்திரமே நன்மைகள் நடைபெற வேண்டும் என்கி ன்ற மனநிலையை எங்களைவிட்டு நாம் அகற்றிவிட வேண்டும். தேவ னாகிய கர்த்தர் எங்களுக்கு கொடுத்த பொறுப்பை, எங்களுக்கு கொடு க்கப்பட்ட பெலத்தின்படி நாங்கள் நிறைவேற்றி முடிப்பதே அவசி யமானது. ஒரு சிலர் வாதுக்கும் தங்கள் சுய பெருமைக்கும் கிரியை களை நடப்பித்தால், அவர்கள் அதற்குரிய பலனை அடைவார்கள். விதண்டாவாதங்களும், சுய பெருமையும் பரலோகத்தில் இல்லை. எனவே அவர்கள் அவற்றை இந்தப் பூமியிலே தான் கண்டடைய முடியும். நீங்களோ, நான் என்கின்ற எண்ணத்தை களைந்து விட்டு, தாழ்மையுள்ள சிந்தையைத் தரித்தவர்களாக, உங்களுக்கு கொடுக்கப் பட்ட அளவி ன்படி, நற்கிரியைகளை நடப்பியுங்கள்.

ஜெபம்:

நன்மை செய்யும் தேவனே, நான் ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத் தாழ்மையோடு, நீர் தந்த பொறுப்பை நிறைவேற்ற என்னை பெலப்படுத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 4:10