புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 06, 2020)

பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரன்

1 பேதுரு 4:10

அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒரு வருக்கொருவர் உதவி செய்யுங்கள்.


ஒரு தொழிற்சாலையிலே, புதிதாக உற்பத்தி செய்யப்படும் உற்பத்தி பொருளை, விற்பனை செய்வதற்காக ஒரு விற்பனை முகாமையாளர் வேலைக்கு அமர்த்தப்பட்டார். அந்த விற்பனையாளர் பயணம் செய்வ தற்கென மோட்டார் வண்டி தொழிற்சாலையினால் வழங்கப்பட்டது. இந்தச் செய்தி, பல ஆண்டுகளாக மிகவும் கண்ணியமாக வேலை செய்து வந்த சிரேஷ்ட கணக்காளா ரின் செவிகளை எட்டியது. “தொழிற் சாலையின் ஆரம்ப நாட்களில் இரு ந்து நான் இப்படியாக பல சவால்கள் மத்தியிலும் வேலை பார்த்து வருகின்றறேன். ஆனால் எனக்கு அப்படியாக சலுகைகளை வழங்கவில்லை, ஆனால் புதிதாக வந்த ஒருவருக்கு நீங்கள் இப் படி செய்கின்றீர்களே” என்று மேல்மு றையீடு செய்தார். அந்த தொழிற்சாலை யின் உரிமையாளர் அவரை நோக்கி: “நீ ஆரம்ப நாட்களில் இருந்தே எனக்கு உண்மையுடன் அதிகமாய் பிரயாசப்பட்டாய். தொழிற்சாலையின் விவ காரங்களை முன்னெடுத்து செல்லும்படியாய் உன்னை மத்திய குழுவிலே ஆலோசகனாக ஏற்படுத்தினேன். நீ வேலை செய்வதற்கு தேவையான யாவற்றையும் உனக்குத் தாராளமாய் கொடுத்திருக்கின்றேன். நீ இந்த காரியாலயத்திலே மட்டும் வேலை செய்கின்றாய். அந்த விற்பனை யாளனோ, ஒவ்வொரு நாளும் இந்த மாகாணத்திலே அதிகதிகமாய் பிரயாணப்பட வேண்டும், ஆகவே மோட்டார் வண்டி அவனுடைய வேலைக்கு அத்தியாவசியமானது” எனக் கூறினார். இதற்கொத்ததாகவே, எங்கள் தேவைகள் இன்னதென்றறிந்த பரமபிதா எங்கள் ஒவ் வொருவரின் தனித்துவமான அழைப்பை நிறைவேற்றுவதற்குரிய தேவைகள் யாவற்றையும் எங்களுக்கு தந்திருக்கின்றார். ஒவ்வொருவருக்கும் வரங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட்டிருக்கின்றது. எப்படியெனில், சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்;, ஒரே சரீரத்தின் அவய வங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது. வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே. எனவே மற்றவனிடம் இருப்பது என்னிடம் இல்லை என்று எண்ணாமல், எங்களுக்கு அருளப்பட்டிருக்கும் ஞானநன்மைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு தேவ சித்தத்தை நிறைவேற்றுவோம்.

ஜெபம்:

நீதியின் தேவனே, சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்; என்ற உண்மையை உணர்ந்து, இந்தப் பூமியிலே உம்முடைய சித்தம் நிறைவேற்றும்படிக்கு முன்னேறிச் செல்ல கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 4:12-13