புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 05, 2020)

எல்லோருடைய நன்மைகளுக்காகவும் நன்றி செலுத்துங்கள்.

1 தெச 1:4

எங்கள் ஜெபங்களில் இடைவிடாமல் உங்க ளைக்குறித்து விண்ணப் பம்பண்ணி, உங்களெல் லாருக்காகவும் எப்பொழுதும் தேவனை ஸ்தோ த்திரிக்கிறோம்.


பல தரப்பட்ட தேவைகளோடுள்ள ஜனங்கள் ஒரு கிராமமொன்றிலு ள்ள ஆலயமொன்றிலே இருந்தார்கள். குறிப்பாக ஒரு தந்தையார் தன் னுடைய மகளின் எதிர்காலத்திற்காக பல மாதங்களாக தொடர்ச்சியாக வேண்டுதல் செய்து வந்தார். ஆலயத்திலுள்ள வேறொரு சிறுமைப்ப ட்ட குடும்பத்திலுள்ள பெண்ணிற்கு நினையாத பிரகாரமாக நல்ல திரு மணம் ஒன்று நிச்சயிக்கப்பட்டது. இந்த சம்பவம், தன் மகளின் எதி ர்காலத்திற்காக வேண்டுதல் செய்து கொண்டிருக்கும் மற்றய தந்தையாரின் செவிகளில் எட்டிற்று. பரந்த மனமு ள்ள அந்தத் தந்தையார், அப்படியாக, சிறுமைப்பட்டிருந்த மற்றய குடும்பத் தில் நடந்த நன்மைக்காக தேவனுக்கு நன்றி கூறினார். தேவரீர் நீர் நினைத்த காரியத்தை தடைசெய்ய யாராலும் கூடாது. நீர் எல்லோருக்கும் நன்மை செய்கின்ற தேவன், எனக்கும் நன்மை செய்வீர் என நல் மனதுடன் தேவனை ஸ்தோத்தரித்தார். பிரியமான சகோதர சகோதரிகளே, எங்கள் வாழ்வில் இன்று அநேக தேவைகள் இரு க்கலாம். சில வேண்டுதல்களை தேவனிடத்தில் ஏறெடுத்திருக்கலாம். எங்கள் தேவைகள் யாவற்றையும் அறிந்த தேவன், அதினதின் கால த்தில் நேர்த்தியாகவும் செம்மையாகவும் யாவையும் நடத்தி முடிப்பார் என்று விசுவாசித்து, எங்களை சூழ இருப்பவர்களின் வாழ்வில் நடை பெறும் நன்மைகளுக்காக நல்மனதுடன் தேவனை ஆராதிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போஸ்தலராகிய பவுலின் வாழ்க்கை யையும் அவரோடு கூட இருந்த உடன் ஊழியர்களின் வாழ்க்கையை யும் சற்று சிந்தித்துப் பாருங்கள். நற்செய்தி அறிவிப்பதினால் அநேக துன்பங்களும் பாடுகளும் அவருடைய வாழ்க்கையில் இருந்தபோதும், தெசலோனிக்கேயர் சபையிலே நடந்து வரும் நன்மைகளை அறிந்த போது, அவர்கள் இன்னும் தேவனுக்குள் பெருகும்படியாக, அவர்களு க்காக இடைவிடாமல் விண்ணப்பம்பண்ணி, அவர்களெல்லாருக்காகவும் எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரித்தார்கள். இப்படிப்பட்ட சிந்தை யுள்ளவர்கள்மேல் தேவன் பிரியமாக இருக்கின்றார். எனவே எங்க ளு க்கு தேவைகள் இருந்தாலும், எங்களைச் சூழ உள்ளவர்களின் வாழ் க்கையில் நடக்கும் நன்மைகளுக்காக தேவனை ஸ்தோத்தரிப்போம்.

ஜெபம்:

அன்புள்ள தேவனே, எங்களைச் சூழ உள்ளவர்களின் வாழ்வில் நடைபெறும் நன்மைகளுக்காக உம்மை ஸ்தோத்தரிக்கும் நன்றி நிறை ந்த உணர்வுள்ள இருதயத்தை எனக்குத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 73:26