புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 02, 2020)

துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தேவன்

சங்கீதம் 22:3

இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர்.


இந்த உலகிலே, பல மனிதர்கள் மனதிலே சமாதானமின்றி வாழ்ந்து வருகின்றார்கள். பொருளாதாரச் செழிப்பு நிறைந்தவர்களும், தங்கள் வாழ்வுக்குப் போதுமான வசதி உள்ளவர்களும், மிகவும் க~;டத்தில் வாழ்பவர்களும் இதற்குள் அடங்குவார்கள். தாம் சமானதானத்தை அடைய வேண்டும் என்பதற்காக பற்பல காரியங்களைச் செய்து, தங் கள் வாழ்க்கையை மாற்றியமைக்க எத்த னிக்கின்றவர்கள் பலர். மனச் சமா தானத்தை அடைய வேண்டும் என்று முயற்ச்சிகள் எடுப்பது நல்லது. ஆனால், சமாதானத்தின் ஊற்று எங்கள் இருத யத்தில் சுரக்கும் வரை, சமாதானக் காரணர் எங்கள் இருதயத்தை ஆட் கொள்ளும்வரை மனிதர்கள் நாடித் தேடும் சமாதானத்தை ஒரு நாளும் அடையப் போவதில்லை. தேவன் வாசம் செய்யும் இடத்தில் பூரண சமாதானம் உண்டு. துதிகளின் மத்தியிலே வாசம் செய்யும் எங்கள் தேவன் எங்கள் இருதயத்தில் வாசம் செய்ய விரும்புகின்றார். எனவே தேவனைத் துதிக்கும் துதி எங்கள் இருதயத்தில் எப்போதும் இருக்க வேண்டும். தேவைகள், நெருக்கங்கள், இன்னல்கள் பெருகும் போது, அவை மனக் கவ லையை உண்டு பண்ணிவிடும். நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத் தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவ சமாதானம் உங் கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. உங்கள் சரீரம் தேவன் தங்கும் ஆலயமாக இருக்கும்படிக்கு, உலக இச்சைகளைச் களைந்து, தேவனை நோக்கி ஏறெடுக்கும் துதி, ஆலயமாகிய உங்களுக்குள்ளே எப்போதும் இருப் பதாக. இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசு த்தர். அந்த பரிசுத்தமான தேவன், துதி பெருகும் எங்கள் இருதயத் தில் வாசமாக இருந்தால், எந்தப் பயமும் எங்களை ஆட்கொள்ள முடியாது. எனவே, விண்ணப்பங்கள், வேண்டுதல்களை தேவனாகிய கர்த்தருக்கு தெரிய ப்படுத்தி, அவருடைய ஆளுகையையும், வல்ல மையான செயல்களையும் அறிக்கையிட்டு துதியுங்கள். உதடு களின் கனியாகிய ஸ்தோத்திரப் பலிகளை செலுத்துங்கள். கர்த்தரை உயர் த்தும் பாடல்களை பாடி, அவருக்குரிய ஆராதனையைச் செய்யுங்கள்.

ஜெபம்:

உன்னதங்களில் வாசம் செய்யும் தேவனே, உம்முடைய சமாதானம் என்னில் நிலைத்திருக்கும்படி ஆவியோடும் உண்மையோ டும் நான் உம்மைத் துதிக்க என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 18:20