புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 01, 2020)

ராஜரீகமான ஆசாரியக்கூட்டம்

1 பேதுரு 2:9

நீங்களோ, உங்களை அந் தகாரத்தினின்று தம்மு டைய ஆச்சரியமான ஒளி யினிடத்திற்கு வரவழை த்தவருடைய புண்ணிய ங்களை அறிவிக்கும்படி க்குத் தெரிந்துகொள்ளப் பட்ட சந்ததியாயும், ராஜ ரீகமான ஆசாரியக்கூட் டமாயும், பரிசுத்த ஜாதி யாயும், அவருக்குச் சொந் தமான ஜனமாயும் இரு க்கிறீர்கள்.


இஸ்ரவேல் புத்திரர் எகிப்தின் அடிமைத்தனத்தினால் தவித்து கொண் டிருப்பதையும், அவர்களுடைய உபத்திரவத்தையும், ஆளோட்டிகளினி மித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலையும், அவர்கள் படுகிற வேதனை களையும் கர்த்தர் அறிந்திருந்தார். அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி, பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டு போய்ச் சேர்க்கவும் தேவன் இறங்கி னார். தம்முடைய ஜனங்களை அடிமை த்தனத்திலிருந்து விடுதலையாக்கும்படி க்கு, தேவன் தம்முடைய தாசனாகிய மோசே என்னும் மனிதனை எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்திற்கு அனு ப்பினார். கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போய், “எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு”. என்று சொல் என்றார். எகிப்தின் ராஜா தன் இருதயத்தை கடி னப்படுத்திய போதும், தேவனாகிய கர் த்தரோ, தம்முடைய ஜனங்கள் தம்மை ஆராதிக்கும்படி தம்முடைய ஓங்கிய புயத்தினாலும். பலத்த கரத்தினாலும் அவர்களை பார்வோனின் கைக்கு வில க்கி மீட்டார். தம்முடைய துதியை சொல்லி வரும் ஜனங்களாக அவர் களை ஏற்படுத்தினார். பிரியமானவர் களே, தம்முடைய ஜனங்கள் அடிமை த்தனத் திலிருப்பதை தேவன் ஒருபோதும் விரும்பியதில்;லை. நாங்க ளும் தேவனை அறியாத காலங்களிலே, பாவத்தின் அடிமைத்தன கட்டுகளிலிருந்தோம். தேவனுடைய கிருபை பிரசன்னமான போது, இயேசு கிறிஸ்து வழியாக அந்தகார இருளிலிருந்து ஆச்சரியமான ஒளிக்கு கொண்டுவரப்பட்டோம். அடிமைத்தன கட்டுக்களிலிருந்து விடுதலை அடைந்தோம். தேவனாகிய கர்த்தர் தாமே, தம் முடைய துதியை சொல்லி வரும் ராஜரீகமான ஆசாரியர் கூட்டமாக எங்களை மாற்றினார். எல்லாவற்றிற்கும் மேலான சர்வ வல்லமையுள்ள தேவனைத் துதித்துப் போற்றும் பெரிதான சிலாக்கியத்தை பெற்ற நாம் மன மகிழ்ச்சியோடு அவருக்கு ஆராதனை செய்வோம்.

ஜெபம்:

பராக்கிரமமுள்ள தேவனே, உம்முடைய துதியை சொல்லி வரும் ஜனங்களாக எங்களை அழைத்தீர். அந்த அழைப்புக்கு பாத்திரராக நாங்கள் வாழும்படிக்கு எங்களை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 100:1-5