புதிய நாளுக்குள்..

தியானம் (தை 31, 2020)

உங்கள் கண்ணீர் துடைக்கப்படும்

வெளி 21:4

அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.


யுத்தங்களினாலும், இழப்புக்களாலும், பிரிவினைகளாலும், பழிவாங்குத லினாலும், ஏமாற்றங்களினாலும், எதிர்பாராத ஆபத்துக்களினாலும், தீராத நோய்களினாலும் வாழ்க்கையில் உண்டாகும் மாற்றங்களை, வாழ் க்கையை நிரந்தரமாக மாற்றும் நிகழ்வுகள் (டகைந உhயபெiபெ நஎநவெள) என்று அழைப்பார்கள். ஆண்டாண்டு; காலங்கள் கடந்து விட்டது, இளமைக் காலம் கடந்து போகின்றது, ஆனால் வாழ்க்கை இப்படித்தானா என்று ஏங் கும் உள்ளங்கள் பல! இந்தப் பூமி யிலே வாழ்க்கை முடியும் காலம் அண் மித்துக் கொண்டிருக்கின்றதே, இனி என்ன நிம்மதி? இனி என்ன ஆறுதல்? என்ற சொல்லமுடியாத ஏக்கங்கள் மனி தர்களின் மனதை வாட்டலாம். இந்த வாழ்க்கை கடந்து போவது உண்மை. இந்த பூமியிலே எங்கள் ஆண்டுகள் முடிந்து போகலாம். ஆனால் கர்த்த ருடைய ஆளுகை முடிவதில்லை. வான மும் பூமியும் அதிலுள்ள யாவும் ஒழி ந்து போகும், எங்கள் வாழ்க்கையில் நிரந்தரமாக ஏற்பட்ட மாற்றங்களும் இந்த வாழ்க்கையோடு ஒழிந்து போகும். ஆனால் ஈடு இணையில் லாத நித்தியமான மகிமை கர்த்தரை நம்பியிருக்கின்றவர்களுக்கு காத் திருக்கின்றது. அவை நூறு ஆண்டுகளுடன் முடிவடைவதில்லை, அந்தப் பேரின்பம் நித்தியமானது. எனவே துக்கப்படாதிருங்கள். உங்க ளுடைய வாழ்க்கையானது எந்த நிகழ்வுகளால் மாற்றப்பட்டாலும், நீங் கள் நம்பின எந்த மனிதர்களாலும் மாற்றப்பட்டாலும், இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறா தவராயிருக்கின்றார். இந்த பூவுலக நிகழ்வுகள் உங்கள் வாழ்க்கையை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மாற் றலாம் ஆனால், தேவனுடைய வார்த்தை உங்கள் வாழ்க்கையை நித் திய நித்தியமாக மாற்றிவிடும். எனவே சோர்ந்துபோகாதிருங்கள், உள் ளான மனு~னானது நாளுக்கு நாள் புதிதாக்கப்படட்டும். மேலும் காணப்படுகிற இந்த உலகத்திற்குரியவைவைகளல்ல, காணாத பர லோகத்தை நோக்கியிருக்கிறோம். அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. வாக்குரைத்த தேவன் அதை நிறைவேற்றி முடி ப்பார்.

ஜெபம்:

என்றும் மாறாத தேவனே, இந்த பூவுலக வாழ்க்கை எப்படியாக இருந்தாலும், அது தற்காலினமானது என்பதை உணர்ந்து, நித்தியமான பேரின்ப வாழ்வை நோக்கி முன்னேற கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 11:28