புதிய நாளுக்குள்..

தியானம் (தை 30, 2020)

விடியலை நோக்கும் மனிதர்கள்...

சங்கீதம் 25:15

என் கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக் கொண்டிருக்கிறது. அவரே என் கால்களை வலைக்கு நீங்கலாக்கி விடுவார்.


என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்;, நான் தனித்தவனும் சிறு மைப்படுகிறவனுமாயிருக்கிறேன். என் இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கிறது. என் இடுக்கண்களுக்கு என்னை நீங்கலாக்கிவிடும். என் துன்பத்தையும் என் வருத்தத்தையும் பார்த்து, என் பாவங்களை யெல்லாம் மன்னித்தருளும். என் சத்துருக்களைப் பாரும்; அவர்கள் பெருகியிருந்து, உக்கிரபகையாய் என் னைப் பகைக்கிறார்கள். என் ஆத்துமா வைக் காப்பாற்றி என்னை விடுவியும்;. நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய் யும்; உம்மை நம்பியிருக்கிறேன். உத்த மமும் நேர்மையும் என்னைக் காக்க க்கடவது. நான் உமக்குக் காத்திருக் கிறேன் என்று தாவீது தன்னுடைய வியாகுலங்கள் பெருகும் போது, எதி ரிகள் பெருகி சூழ்ந்து கொள்ளும் போது தேவனை நோக்கி இவ்வண் ணமாகப் பாடினார். இரக்கத்தை வேண்டி நிற்கும் வேளையிலே, என் துன்பத்தையும் என் வருத்தத்தையும் பார்த்து, என் பாவங்களையெ ல்லாம் மன்னித்தருளும் என்று பாவ அறிக்கையை செய்கின்றார். நாங்களும் எங்களுடைய வாழ்நாட்களிலே இப்படியான சூழ்நிலைக ளுக்கு தள்ளப்பட்டிருக்கலாம் அல்லது தள்ளப்படலாம். சிந்தித்து செயலாற்ற முடியாதபடிக்கு, எங்கள் பலவீனங்கள் தலைதூக்கி, காரி ருள் சூழ்ந்திருக்கும் நிலைமைகள் உருவாகலாம். எப்போது விடி யலை காண்பேன் என்று காத்திருக்கும் காவலனைப் போல, விக்கின ங்கள் எப்போது கடந்து போகும் என்ற ஏக்கம் உண்டாகலாம். இனி வாழ்க்கை இப்படித்தானா இருக்கப் போகின்றது? எனக்கு விடுதலை இல்லையா? நிம்மதி இல்லையா? என்று ஏங்கித் தவிக்கும் மனிதர்கள் பலர். இப்படிப்பட்ட சூழ்நிலையிலே, தாவீது தேவனாகிய கர்த்தரை நோக்கிப் பார்க்கின்றார். என் தேவன் என் கால்களை எதிரிகளின் வலைக்கு (கண்ணிகளுக்கு) விலக்கிக் காப்பார் என்று தேவனிடத்தில் தன் நம்பிக்கையை வைத்தார். ஆம் பிரியமானவர்களே, நீங்கள் எங்கி ருந்தாலும், கர்த்தரை நோக்கி காத்திருங்கள். கர்த்தாவே, உம் முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என் னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், என்று அவ ரிடத்திலே அறிக்கையிட்டு பொறுமையோடு காத்திருங்கள்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, பொழுதுவிடிந்து விடிவெள்ளி எங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் உம்முடைய வார்த்தைகளை நம்பி, உம்மையே நோக்கி காத்திருக்க என்னைப் பெலப்படுத்துவீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 பேதுரு 1:19