புதிய நாளுக்குள்..

தியானம் (தை 28, 2020)

இயேசுவின் பிரசன்னத்தில் விடுதலை

சங்கீதம் 84:10

ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது.


முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன் பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளத்தின் அருகே இருந்தான். அவன் இயே சுவை சந்தித்த நாளில் பூரண சுகமடைந்தான். பன்னிரண்டு வருடங்க ளாக வியாதியினால் அவஸ்தைப்பட்டு, தனக்குண்டானதெல்லாவற்றை யும் மருத்துவர்களிடம் செலவழித்தும் சுகத்தை கண்டடையாத ஒரு ஸ்திரி இருந்தாள். அநேக வருடங் களாக அவளுக்கு கிடைக்க முடியாதி ருந்த சுகத்தை, ஒரு நொடிப் பொழு தில், இயேசுவின் பிரசன்னத்தில் பெற் றுக் கொண்டாள். சிலுவையிலே அறை யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவன், தான் மரிக்கும் தறுவாயில் இயேசுவை நோக்கி: உம்முடைய ராஜ்யத்தில் நீர் வரும் போது என்னை நினைவுகூர்ந்த ருளும் என்று மன்றாடினான். அக்கணமே, இயேசு அவனை நோக்கி: இன்று நீ என்னோடு பரதீசில் இருப்பாய் என்று வாக்குக் கொடுத்தார். இப்படியாக அநேகர் ஆண்டாண்டு காலமாக இந்த உலகத்திலே விடு தலையை, நிம்மதியைத் தேடி அலைந்தார்கள். அவர்கள் தாங்கள் வாழ் ந்த ஆண்டுகளில் அடைய முடியாமற்போனதை இயேசுவின் பிரசன்ன த்தில் ஒரு நொடிப் பொழுதில் பெற்றுக் கொண்டார்கள். அதாவது, இயேசுவை ஏற்றுக் கொண்டவர்கள் தங்கள் வாழ்வில் சரீர சுகத்தை மட்டுமல்ல, அதற்கு மேலாக, இந்த உலகம் தரமுடியாத பாவ மன்னி ப்பைப் பெற்று, ஆன்மீக விடுதலையை அடைந்து, பரமனோடு நீடூழி யாக வாழும் பாக்கியத்தை அடைந்தார்கள். பணமும் இன்றி விலை யும் இன்றி இந்த உலக செல்வங்களால் தரமுடியாத ஒப்பற்ற சமா தானத்தை அடைந்தார்கள். இந்த உலகத்திலே நாங்கள் நூறு வருட ங்கள் இயேசு இல்லாமல் வாழ்ந்தாலும் அதன் முடிவு பரிதவிக்கப்ப டத்தக்கது. ஆனால், அவருடைய தூய பிரசன்னம் எங்கள் மத்தியிலே வரும் போது, அந்த நாள் பாக்கியம் நிறைந்த நாள்! ஆம் பிரியமான வர்களே, இந்த உலகிலே ஆயிரம் நாட்களை செலவிட்டு, கண்டடைய முடியாத ஆனந்த பாக்கியத்தை இயேசுவின் பிரசன்னத்தில் இருக்கும் ஒரே நாளில் கண்டடைகின்றோம். அவருடைய பிரசன்னத்தில் இருக் கும் ஒரே நாள் அவ்வளவு இனிமையானதாக இருந்தால், அவரோடு நாங்கள் நித்தி நித்தியமாய் வாழும் வாழ்க்கையின் இனிமையை வார்த் தைகளால் வர்ணிக்க முடியாது. எனவே இந்நாட்களிலே இயேசுவின் பிரசன்னத்தில் இருப்பதையே அதிகதிகமாக வாஞ்சித்து நாடுவோம்.

ஜெபம்:

அன்பின் பரலோக தந்தையே, உம்முடைய திருச்சமுகத்திலே இருக்கும் ஆனந்த பாக்கியமானது அளவிட முடியாது. நான் அதையே எப்போதும் நாடித் தேட என்னை உணர்வுள்ளவானா(ளா)க்கும். இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாத் 14:13