புதிய நாளுக்குள்..

தியானம் (தை 25, 2020)

எப்போதும் எங்களோடு இருக்கும் இயேசு

சங்கீதம் 73:24

உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.


சில வேளைகளிலே, எங்களுடைய வாழ்வு, பாலைவனத்தின் வழி யாக பயணம் செய்வது போல மிகவும் வறண்டதும் விடாய்ததுமாக தோன்றலாம். இந்த நாளை அல்லது மாதத்தை அல்லது ஆண்டை எப்படியாக கடந்து போகப் போகின்றேன் என்று அங்கலாய்க்கும் வேளைகள் உண்டு. அப்படிப்பட்ட வேளைகளிலே, இக்கரை மாட் டிற்கு அக்கரை பச்சை என்பது போல, எங்களைச் சூழ வாழும் தேவனை அறி யாதவர்கள் சிலரின் வாழ்க்கை பசு மையாகத் தோன்றும். அவர்கள் வாழ் க்கை எவ்வளவு களிப்பாகவும் செழி ப்பாகவும் இருக்கின்றது ஆனால் இயே சுவை அறிந்த என்னுடைய வாழ்க்கை இப்படியாக இருக்கின்றதே என்ற எண் ணங்கள் வந்து போகலாம். “துன்மார் க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமைகொண்டேன். மரணப ரியந்தம் அவர்களுக்கு இடுக்கண்களில்லை. அவர்களுடைய பெலன் உறுதியாயிருக்கிறது. நரர் படும் வருத்தத்தில் அகப்படார்கள்; மனு~ர் அடையும் உபாதியை அடையார்கள்.” என்று நாங்கள் மட்டுமல்ல வேதத்திலுள்ள சில மனிதர்களும் இவ்வண்ணமாக சிந்தித்த வேளை கள் உண்டு. ஆனாலும், அவ்வண்ணமாக சிந்தித்த தேவ பிள்ளைகள் தங்கள் மதியீனத்தை உடனடியாக உணர்ந்து கொண்டார்கள். “ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என் வலதுகை யைப் பிடித்துத் தாங்குகிறீர். உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர். பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.” என்று அறிக்கை யிட்டார்கள். ஆம் பிரியமானவர்களே, இயேசுவை தங்கள் வாழ்வின் இதய தீபமாக கொண்டிராமல் இந்த உலகத்திலே பசுமையாக தோன் றுகின்ற வழிகளிலே வாழ்கின்றவர்கள் நித்தியமான பாலைவனத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்கள். ஆனால், பாலைவனம் போல எங்கள் வாழ்க்கையிருந்தாலும் இயேசு எங்களோடு இருப்ப தால் அவர்தாமே நம்மை அழியாததும் வாடாததுமான நித்தியமான பரலோ கத்திற்கு எங்கைள வழிநடத்திச் செல்கின்றார். முடிவிலே எம்மை மகி மையிலே சேர்க்கும் இயேசு எங்களோடிருப்பதே எங்கள் பாக்கியம்.

ஜெபம்:

பரலோக தேவனே, அநித்தியமான உலக சந்தோஷங்களை நோக்கி வாழாமல், நீர் எங்களோடு இருக்கும் பாக்கியத்தை உணர்ந்தவர்களாக வாழும்படி எங்களுக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 4:16-18