புதிய நாளுக்குள்..

தியானம் (தை 23, 2020)

நித்திய ஆறுதல் உண்டு

2 கொரிந்தியர் 7:10

தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது.


இயேசுவின் பிரதான சீஷனாகிய சீமோன் பேதுருவைப் பற்றி நாங்கள் யாவரும் அறிந்திருக்கின்றோம். இவர் இயேசுவோடு ஏறத்தாழ மூன்று வருடங்கள் ஒன்றாக இருந்து ஊழியம் செய்து வந்தார். ஆனாலும், இக்கட்டான சூழ்நிலையிலே, தான் தப்பித்துக் கொள்ளும்படிக்கு “இயேசுவை எனக்குத் தெரியாது” என்று மூன்று முறை மறுதலித்தார், சாபமான வார்த்தைகளைப் பேசினார். பின்பு, தன் குற்றத்தை உணர்ந்த போது, மனங்கசந்து அழுதார். தன் நிலை யைக் குறித்து மன வேதனை அடை ந்தார். இது மனம்திரும்புதலுக்கு ஏது வான துக்கம். இது ஆத்துமாவானது தேவனை நோக்கி அபயமிடும் துயரம். இப்படிப்பட்டவர்கள் ஆசீர்வதிக்கப் பட் டவர்கள் ஏனெனில் இவர்கள் ஆறுதல் அடைவார்கள். “மரணக்கட்டுகள் என் னைச் சுற்றிக்கொண்டது; துர்ச்சனப்பிர வாகம் என்னைப் பயப்படுத்தினது. பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது. மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.” என்று தாவீது தன் சங்கீதம் ஒன்றிலே பாடினார். இந்த நிலைமை அவருக்கு ஏன்? எப்படி ஏற்பட்டது என்பதல்ல, அது எப்படியாக இருந்தாலும், தனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த் தரை நோக்கிக் கூப்பிட்டு, தன் தேவனை நோக்கி அபயமிட்டார். அவர் கூப்பிடுதல் தேவ சந்நிதியில் போய், தேவனுடைய செவிகளில் ஏறிற்று.” தேவன்தாமே, உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து தூக்கிவிட்டார். தாவீதிற்கு பெரிதான ஆறுதல் உண்டாயிற்று. இயேசுவோடு சிலுவையிலே அறையப்பட்ட குற்றவாளிகளில் ஒருவன், தான் மரிக்கப்போகும் தறுவாயில், “நான் என்னுடைய குற்றத்திற்காக இந்த தண்டனை அனுபவிக்கின்றேன்” என்று கூறி இயேசுவே, உம் முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்;தருளும் என் றான். “இன்றே என்னோடு கூட நீ பரதீசிலிருப்பாய்” என நித்திய ஆறுதலை அவன் அடைந்து கொண்டான். பிரியமானவர்களே, துயர ப்படுகின்றவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவன், அவர்களை தேற் றுவார். அவர்கள் முடிவிலே நித்திய இளைப்பாறுதலிலே பிரவேசிப் பார்கள். வான்வீட்டிலே, கர்த்தரோடு நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பார்கள். மனந்திரும்புதலுக்கேதுவான “உங்கள் துக்கத்தை” தேவன் சந்தோஷமாக மாற்றுவார். இயேசுவிலே என்றும் நிலைத்திருங்கள்.

ஜெபம்:

அன்புள்ள தேவனே, என் வாழ்க்கையில் என்னதான் நடந்தாலும், நான் மரணத்திற்கேதுவான துக்கம் அடையாதபடிக்கு, உம்மை நோக்கி பார்க்கும் இருதயத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 11:28