புதிய நாளுக்குள்..

தியானம் (தை 21, 2020)

பரலோகத்தில் பெரியவன் யார்?

மத்தேயு 5:19

இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்.


இந்த உலக அளவுகோல்களின்படி ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் எனப்படு கின்றவர்களும், பாக்கியம் பெற்றவர்கள் எனப்படுகின்றவர்களும்; இரு க்கின்றார்கள். இந்த அளவுகோல்களில், பதவி, அந்தஸ்து, கல்வியறிவு மற்றும் உலக ஐசுவரியம் போன்றவைகள் நிச்சயமாக இடம்பெறும். ஆனால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறும் பாக்கியம் பெற்ற வர்கள் யார்? ஆசீர்வதிக்கப்பட்டவர் கள் யார்? ஆவியில் எளிமையுள்ளவர்கள், துயரப்படுகிறவர்கள், சாந்தகுணமுள் ளவர்கள் நீதியின்மேல் பசிதாகமுள் ளவர்கள் இரக்கமுடையவர்கள், இரு தயத்தில் சுத்தமுள்ளவர்கள், சமாதானம் பண்ணுகிறவர்கள், மற்றும் நீதியினிமி த்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கிய வான்களாக இருக்கின்றார்கள் என்று இயேசு கூறியிருக்கின்றார். இயேசு கூறும் பாக்கியவான்களுக்கு உரி த்தாகும் பலன்கள் என்ன? பரலோகராஜ்யம் அவர்களுடையது, அவ ர்கள் ஆறுதலடைவார்கள், பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள், திருப்தியடைவார்கள். இரக்கம் பெறுவார்கள், தேவனைத் தரிசிப்பா ர்கள், தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள், பரலோகராஜ்யம் அவ ர்களுடையது. இவை தேவ ராஜ்யத்தினுடைய அளவுகோல்களாகவும் அவைகளினால் உண்டாகும் பலன்களாகவும் இருக்கின்றது. இவைகள் தேவனுடைய பார்வையிலே மேன்மையானவைகள். இவை மனி தர்களினால் ஏற்;படுத்தப்பட்டிருக்கும் எவ்விதமான பாகுபாட்டினாலும், அளவுகோல்களினாலும் கட்டுப்படுத்தி, மட்டுப்படுத்த முடியாதவைகள். உயர்ந்தவன் மேன்மையானவைகளை அடையலாம், தாழ்ந்தவன் அவை களை அடையமுடியாது என்ற நிலைமை இங்கு இல்லை அல்லது தாழ்ந்தவன் இதை அடையலாம் உயர்ந்தவன் இதை அடையமுடியாது என்ற நிலைமையும் இல்லை. தேவனுடைய வார்த்தையை கைக் கொண்டு அதை போதிக்கின்றவன், இந்த உலகத்தின் பாகுபாட்டிற்கு அப்பாற்பட்டவனாக இருக்கின்றான். தேவ கற்பனைகள் எல்லாவற்றி லும் சிறிதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதி க்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படு வான்;. இந்த பூமியிலே உப்பாகவும், இந்த உலகத்திற்கு வெளிச்சமா கவும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நாங்கள், பரம பிதா எங்களில் மகி மைப்படும்படி பரலோகத்தில் மேன்மையாக கருதப்படுகின்றவை களைக் கைக்கொண்டு அவைகளையே நாடித் தேடுவோம்.

ஜெபம்:

பரம தந்தையே, இந்த உலகத்தின் அளவுகோல்களுக்கு நான் அடிமைப்படாமல், பரலோக ராஜ்யத்தின் மேன்மைகளை என் வாழ்வில் நாடித் தேடும்படிக்கு என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கொலோசெயர் 3:1