தியானம் (தை 19, 2020)
எங்களைவிட்டு எடுபடாத ஒப்பற்ற ஐசுவரியம்
யோபு 1:22
இவையெல்லாவற்றிலும் யோபு பாவஞ்செய்யவுமில்லை, தேவனைப் பற்றிக் குறைசொல்லவு மில்லை.
யோபு என்னும் ஒரு ஐசுவரியவான் இருந்தான். அவனுக்கு ஏழு குமா ரரும், மூன்று குமாரத்திகளும் பிறந்தார்கள். அவனுக்கு ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, திரளான பணிவிடைக்காரருமிருந்தார்கள்; அதினால் அந்த மனு~ன் கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந் தான். இப்படியாக திரவிய சம்பத்துடை யவனாக இருப்பது இந்த உலகத்திலே பெரிதான சிலாக்கியம் என்று மனி தர்கள் கூறிக் கொள்வார்கள். ஆனால், இந்த ஐசுவரியவானிடம், இதைவிட மேன்மையானதும் அழியாததுமான ஐசுவரியம் இருந்துது. யோபு உத் தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவ னுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்று அவனைக் குறித்து கர்த்தர் சாட்சி பகிர்ந்தார். இந்த உலகத்திலே செல்வத்துடனும் செழிப்புடனும் வாழும் பலர் தாங்கள் செய்யும் தொழிலே தெய்வம் என்றும், தாங்கள் கற்ற கல்வியும், தங்கள் அனுபவமும் அதற்கு தூணாக விளங்குகின்றது என்றும் எண்ணி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் தங்கள் தொழில் பாதி ப்படையும்போதோ, “தேவன் எங்கே” என்று கூறிக் கொள்வார்கள். சாபமான வார்த்தைகளை கூறிக் கொள்வார்கள். அதுபோலவே, இந்த உலகத்திலே உண்டான ஆசீர்வாதங்களை யோபுவை விட்டு அப்புற ப்படுத்தினால், அவன் தேவனை மறுதலிப்பான் என்று சாத்தான் எண் ணியிருந்தான். ஆனால், இந்த செல்வந்தனாகிய யோபு, தேவனுக்குப் பயந்து அவர் வழிகளில் வாழ்ந்து வருபவனாக இருந்ததால் அவன் ஞானமுள்ளவனாக இருந்தான். அதனால் இந்த உலகத்தின் பொரு ட்கள் அநித்தியமானவைகள் என்றும், தன்னைவிட்டு எடுபடாதா ஒப்ப ற்ற செல்வமாகிய தேவனை தன் ஐஸ்வரியமாக கொண்டிருந்தான். இந்த உலகத்தின் பொக்கி~ம் யோபுவிடம் இருந்த நாளிலும், அவை கள் அவனைவிட்டு எடுத்துக் கொள்ளப்பட்ட நாளிலும், தேவனைக் குறித்த மனநிலை மாறிப்போகவில்லை. அதுபோலவே நாங்களும் தேவனை பற்றிக் கொண்டவர்களாக இருப்போம்.
ஜெபம்:
சகலத்தையும் படைத்த தேவனே, என்னிடம் என்ன இரு ந்தாலும், இல்லாமற்போனாலும் பாவம் செய்யாமல் உம்மைச் சார்ந்து வாழும் வாழ்க்கையை அடியேனுக்கு அருள்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - ஆபகூக் 3:17