புதிய நாளுக்குள்..

தியானம் (தை 17, 2020)

தம்மைப் பகைத்த உலகத்தின்மேல் இயேசு அன்புகூர்ந்தார்.

லூக்கா 23:34

அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.


“உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக் கிறதற்கு முன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். நீங்கள் உலகத்தாரா யிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலக த்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந் துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.” என்று இயேசு கூறியிருக்கின்றார். கிறிஸ்துவை அறியாத நாட்களிலே இந்த உலகத்தின் போக்கில் வாழ்ந்து வந் தோம். அவர் எங்களது வாழ்க்கையை மாற்றிய நாளிலே இந்த உலகமானது எங்களது நிரந்தரமான குடியிருப்பு அல்ல என்பதை நாம் அறிந்து கொண் டோம். பாவத்தினால் ஒருவரும் பாதா ளத்திலே நித்திய நித்தியமாக அழிந்து போகாதபடிக்கு, யாவரையும் மீட்டுக் கொள்ளும்படிக்காய் இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தார். ஆனால் அவர்களோ அவரை ஏற்றுக் கொள்ள வில்லை. பலர் அவரைப் பகைத்தார்கள். தங்கள் வெறுப்பை பல வழிகளிலே காண்பித்தார்கள். ஆனால், தேவன், தம்முடைய ஒரேபே றான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போ காமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வ ளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். உலகத்தையும், அதன் போக்கை யும் அவர் நேசிக்காமல், அந்த உலகத்தினாலும், உலக போக்கினா லும் மனிதர்கள் மாண்டு போகக் கூடாது என்று அவர்களை நேசமாக அழைக்கின்றார். எனவே, இன்றைய நாட்களிலே இந்த உலகத்திலுள் ளவர்கள் எங்களைப் பகைக்கலாம். ஆனால் நாங்கள் அவர்களை வெறுத்துத் தள்ள முடியாது. நாங்களோ உலகத்தின் போக்குகளுக்கும், உலகத்திலுள்ளவைகளிற்கும் உடன்பட்டவர்கள் அல்லர். ஆனால் உல கத்தின் போக்குகளினாலும், உலகத்திலுள்ளவைகளினாலும் அடிமைப்ப ட்டிருக்கும் மனிதர்களால் எங்களுக்குப் பாடுகள் உண்டானாலும், தம் முடைய பாடுகளின் மத்தியிலும் தம்மை உபத்திரவப் படுத்துகின்றவ ர்களெல்லாருக்காகவும் எப்படியாக கர்த்தராகிய இயேசு தம்முடைய பிதாவை வேண்டிக் கொண்டாரோ அப்படியே நாங்களும் தேவனை வேண்டிக் கொள்ளவேண்டும்.

ஜெபம்:

அன்பின் தேவனே, இந்த உலகம் என்னைப் பகைத்தாலும், நான் அவர்களைப் பகைக்காமல், தேவ கிருபையானது அவர்களை விடுத லையாக்கும்படிக்கு வேண்டுதல் செய்யும் இருதயத்தைத் தந்தருள்வீ ராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 யோவான் 4:9