புதிய நாளுக்குள்..

தியானம் (தை 16, 2020)

எங்களைச் சூழ இருப்போர் இடறலடைந்தாலும் நீங்கள் இடறிப்போகாதிருங்கள்

கலாத்தியர் 3:28

நீங்களெல்லாரும் கிறி ஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்


இயேசுவானவர் தாம் வளர்ந்த ஊரிலே வந்து, அவர்களுடைய ஜெப ஆலயத்திலே உபதேசம்பண்ணினார். அவர்கள் ஆச்சரியப்பட்டு: இவ னுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது? இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு யோசே சீமோன் யூதா என்பவர்கள் இவனு க்குச் சகோதரர் அல்லவா? இவன் சகோ தரிகள் எல்லாரும் நம்மிடத்தில் இருக் கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந் தது. என்று சொல்லி, அவரைக் குறி த்து இடறலடைந்தார்கள். இன்று எங் கள் ஒவ்வொருவரைக் குறித்தும் பலர் பலவிதமான அபிப்பிராயங்களை வைத்திருக்கலாம். குடும்ப அங்க த்தவர்கள், அயலவர்கள், சக வேலையாட்கள், சமுதாயம் இப்படியாக பலரும் எங்களைக் குறித்து பல கருத்துக்களை தெரிவிக்கலாம். சில வேளைகளிலே காலாகாலமாக சமுதாயம் எங்களை ஒடுக்கி வைத் திருக்கலாம் அல்லது சமுதாயம் பெரும் அந்தஸ்;தை கொடுத்திரு க்கலாம். இவை இரண்டும் தேவனால அழைக்கப்பட்ட பிள்ளைகளின் நிலைகளை நிர்ணயிக்கமாட்டாது. அப்படியானால் நாங்கள் யார்? “நீங் களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவ னுடைய புத்திரராயிருக்கிறீர்களே. ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்கு ள்ளாக, ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ அத்தனை பேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே. யூதனென்றும் கிரேக்க னென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணெ ன்றும் பெண்ணென்றுமில்லை, நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக் குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.” என்று பரிசுத்த வேதாகமம் எங்களைக் குறி த்து கூறுகின்றது. எனவே, நாங்கள் கிறிஸ்துவை தரித்தவர்களாக, அவ ருடைய நற்பண்புகளை நாங்கள் எங்கள் வாழ்வில் வெளிக்காட்டு கி ன்றவர்களாக நடந்து, கிறிஸ்துவின் நற்செய்திகளை அறிவிக்கும் போது, இந்த உலகம் எங்களைக் குறித்து குறை கூறினாலும், நாங்கள் சோர் ந்து போகக்கூடாது. அது போலவே இந்த உலகம் எங்களை போற் றும் போது, அது எங்களுக்கு இடறலாகப் போகாதபடிக்கு, “அப்பிர யோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம்” என்று சொல்லுங்கள் என்றார்.

ஜெபம்:

மகிமையின் தேவனே, இந்த உலகத்தில் உண்டாகும் நிந்தையான பேச்சுக்களாலும், முகஸ்துதியாலும் நான் இடறலடை யாமல், பெற்ற பணியை நிறைவேற்ற கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 17:10