தியானம் (தை 14, 2020)
சமாதானமான வாழ்வின் அடிப்படைக் காரணி
பிரசங்கி 12:13
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அ வர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.
எந்த ஒரு நன்மைக்கும் ஒரு சிறிய ஆரம்பம் (நல்ல விதைகள்) இரு ப்பது போல, எந்த ஒரு தீமையான அடிமைத்தனத்திற்கும் ஒரு சிறிய ஆரம்பம் (தீய விதைகள்) இருக்குமென்பதை நாங்கள் நன்றாக அறி ந்து கொள்ள வேண்டும். மதுபானம் போதை வஸ்துக்களுக்கு அடிமை ப்பட்டிருக்கின்றவர்கள், ஒரே நாளில் அந்த நிலையை அடைவதில் லை. மோக பாவ இச்சைகளுக்கு அடி மைப்பட்டிருக்கின்றவர்கள் ஒரே நாளி லே அந்நிலைக்கு வருவதில்லை. கடு ங்கோபத்தினால் மூர்க்கவெறி கொள் பவர்கள் அந்த நிலையை தங்களுக் குள், ஒரு சில சந்தர்ப்பங்களினால் உண் டாக்கவில்லை. தீமையான விதைகளை விதைத்து, அதற்கு தண்ணீர் ஊற்றி, பராமரிப்பது போல, மாம்சத்தின் இச் சைகளை விட்டுவிட மனதில்லாமல், அதை தங்கள் இருதயத்திலே வைத் திருப்பவர்கள் காலப்போக்கில் இந்த நிலையை அடைகின்றார்கள். இவைகள் யாவற்றிலும் விசுவாசிகள் மத் தியிலே பொதுவாகப்; பாதகமற்ற கண்ணியைப் போல எண்ணப்படுவது இந்த உலகத்தின் செல்வச் செழிப்பாகும். பலர் இந்த உலக ஐசுவ ரியத்தின் பெருக்கத்தை தேவனுடைய ஆசீர்வாதத்தின் அளவுகோ லாக பயன்படுத்தி வருகின்றார்கள். “எனக்கு பண ஆசை இல்லை” அல்லது “அவரைப் போல நான் பணத்திற்கு அசைந்து கொடுப்பவன் அல்ல” என்று விசுவாசிகள் கூறிக் கொள்வார்கள். அப்படி இருந்தால் அது மிகவும் நல்லது. இது நான் உங்களைப் பற்றியோ, அல்லது நீங்கள் என்னைப்பற்றியோ கூறும் குற்றச்சாட்டு அல்ல. மாறாக இது திருக்குள்ள பாசிபடிந்த நிலம் என்பதை நானும் நீங்களும் அறிந்து கொள்ள வேண்டும். பண ஆசை இல்லை, ஆனால் அதை அடைவ தற்குரிய சூழ்நிலைகளை எங்கள் வாழ்க்கையிலோ, அல்லது எங்களு டைய பிள்ளைகளுடைய வாழ்க்கையிலோ நாங்கள் வகுத்துக் கொடு க்கக் கூடாது. அவை மிகவும் சிறிய விதையாக விதைக்கப் படும். ஆண் டுகள் கடந்து சென்றபின் எல்லாத் தீமைக்கும் வேராக அது மாறிவிடும். எனவே சமாதானமான வாழ்வின் மையப்பொருள் உலக கல்வியும், ஐசுவரியமும் அல்ல. தேவனுக்கு பயந்து அவர் வழிகளில் நடப்பதே அவசியமானது என்று நாங்கள் நன்றாக உணர்ந்து, அவைகளை எங்கள் பிள்ளைகளுக்கு கருத்துடன் கற்றுக் கொடுக்க வேண்டும்.
ஜெபம்:
சகலமும் அறிந்த தேவனே, உம்முடைய நல்லாலோசனைகளை தள்ளிவிடாமலும், உம்முடைய கடிந்து கொள்ளுதலை அற்பமாக எண்ணாமலும் வாழும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 1 தீமோ 6:6-13