புதிய நாளுக்குள்..

தியானம் (தை 13, 2020)

சிறிதான ஆரம்பமும் பெரிதான முடிவும்

1 தெச 5:22

பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்.


நற்பண்புகளுடன் தங்கள் பிள்ளையை வளர்த்து வந்த பெற்றோர், ஒரு நாள் அவன் சிறுவர் பாடசாலையில் இருந்து திரும்பும் போது, கூறிய கெட்ட வார்த்தையைக் குறித்து அதிர்ச்சியடைந்தார்கள். மாலை யிலே அவனை பரிவோடு அழைத்து நீ பேசிய அந்த வார்த்தை நல்ல வார்த்தையல்ல, இனிமேல் அதை நீ பேசக்கூடாது என்று தயவுடன் சொல்லிக் கொடுத்தார்கள். அது போல எங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையிலும், குழந்தைகளாக இரு ந்து வளர்ந்து வருபவர்களுக்கு, சில வேளைகளிலே, இந்த உலகத்திலே நடக்கும் அசுத்த மானதும், தீமையா னதும், யோக்கியமற்றதுமான காரிய ங்களை விபரித்துக் கூற முடியாது. உதாரணமாக, இந்த உலகத்தில் பேச ப்படும் தூஷணமான வார்த்தைகள் என்று ஒரு பட்டியலை யாவ ருக்கும் கொடுப்பதினால், அவர்கள் ஒருநாளும் அறியாத கெட்ட வார்த்தைகளை அவர்கள் கற்றுக் கொள்வார்கள். ஆனால் எல்லா காரியங்களும் அப்படியானவைகள் அல்ல. எடுத்துக் காட்டாக, ஒரு குழந்தை தன் தொட்டிலிலே இருக்கும் போது, அக்குழந்தையை அதன் பெற்றோர், சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பாதுகாப்பார்கள். அக்குழந்தையின் உலகம் அந்த தொட்டிலாகவே இருக்கும். குழந்தை வளர்ந்து வரும் போது, கைகளை கழுவி விட்டு சாப்பிட வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கின்றார்கள். அதுமட்டுமல்ல, நீ கைகளை கழுவாமல் சாப்பிடும் போது, அதனால் வரக்கூடிய பாதிப்புக்கள் எவைகள் என்றும், வீட்டிலும், பாடசாலையிலும் கற்றுக் கொடுக்கின்றா ர்கள். எனவே, உலகத்திலே நன்மையானதை மட்டும் பார் என்று சொல்லி விட்டு போக முடியாது. அதுபோலவே, எப்போதும் எல்லா இடங்களிலும் தீமையைப் பற்றியே கற்றுப் கொடுப்பதும் தகுதியாயி ராது. ஆனால் அந்தந்த வயதில் பிள்ளைகள் எதிர்நோக்கக் கூடிய பொல்லாங்கான காரியங்களையும், அதனால் வரக்கூடிய பாதகமான விளைவுகளையும் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். சிறிதான ஆரம்பம் பெரிதான பலனைக் கொண்டு வரும் என்று நேற் றய நாளில் பார்த்தோம். அதுபோல, சிறிதாக இருக்கும் எங்கள் மாம்ச இச்சைகளை நாங்கள் நாளாந்தம் பயிற்ச்சி செய்யும் போது, அது வள ர்ந்து பெருகி, பெரும் விருட்சமாக மாறி, பெரிதும் பயங்கரமுமான விளைச்சலை உண்டு பண்ணும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

ஜெபம்:

அன்பின் பரலோக தந்தையே, உமக்கெதிராக என்னை பாவம் செய்ய கொண்டு செல்லக்கூடிய பொல்லாங்கான காரியங்களை விட்டு விலகும்படிக்கு ஞானமுள்ள இருதயத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோபு 4:8