புதிய நாளுக்குள்..

தியானம் (தை 12, 2020)

சகலவித நற்கிரியைகளில் நாளுக்கு நாள் நாம் பெருக வேண்டும்

2 கொரிந்தியர் 9:8

சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல் லவராயிருக்கிறார்.


எந்த ஒரு செயல்திறனும் (வயடநவெ) நாளாந்த பயிற்சியினால் அவனவ னுடைய வாழ்க்கையிலே விருத்தியடைய ஆரம்பிக்கிறது. எந்த ஒரு நற்கிரியைக்கும் ஒரு சிறிய ஆரம்பம் இருக்கும். எடுத்துக்காட்டாக, ஊரி லுள்ள ஒரு மனிதனை கொடை வள்ளல் என்று யாவரும் கூறிக் கொள் வார்கள். குறிப்பிட்ட அந்த மனிதன், கொடை வள்ளல் என்ற பெயரை ஒரே நாளில் பெற்றுக் கொள்ளவில்லை. அந்த மனிதனானவன் அநேக ஆண்டு களுக்கு முன்பாக சிறிதாக ஆரம்பி த்த நற்செயல்கள், நாளுக்கு நாள் அவ னில் பெருக ஆரம்பித்தது. மழலைப் பருவம் முடிந்து, பிள்ளைகள் ஓடி விளை யாடும் நாட்களிலே, தங்களுக்கு பிடி த்த விளையாட்டுக்களில் அதிக நாட்ட த்தைக் காண்பிப்பார்கள். இவ் வண்ண மாக குழந்தைப் பருவத்திலே ஒருவ ரும் உதைபந்தாட்ட விளையாட்டு வீர னாக மாறிவிடுவதில்லை. தமக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களை இழந்துவிடாமல், எந்நேரமும் பயிற்றுனரு டைய ஆலோசனையைக் கேட்டு, பயிற்ச்சி எடுப்பவனே சிறந்த உதை பந்தாட்ட வீரனாவான். கருப்பொருளாவது, ஒரு சிறிய ஆரம்பம், தொட ர்ச்சியான பயிற்ச்சியின் மூலம் நன்மையும் பெரிதுமான முடிவைக் கொண்டு வரும். அதேபோல, எங்கள் வாழ்க்கையிலும், தேவனை அறி யும் அறிவில் வளர்ந்து, வாழ்க்கையில் தெய்வீக சுபாவங்கள் பெரு கும்படிக்கு, நாங்கள் கற்றுக் கொண்டவைகளை தினமும் பயிற்ச்சி செய்ய வேண்டும். எங்களுக்கு தேவ ஆலோசனைகளை விளக்கிக் கூறும்படிக்கு பல உபாத்தியாயர்கள் அருளப்பட்டிருக்கின்றார்கள். அவை யாவற்றிற்கும் மேலாக தூய ஆவியானவர் எங்க ளுக்குள்ளே வாசம் செய்து, எங்கள் துணையாளராக, பயிற்றுனராக இருந்து வரு கின்றார். இது தேவனுடைய கிருபை. எனவே, ஒரு சில காரியங் களில் மட்டுமல்ல, நான் விரும்பும் காரியங்களில் மட்டுமல்ல, சகல வித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, ஒவ் வொரு நாளும், நாங்கள் படிப்படியாக முன்னேறிச் செல்ல வேண்டும். இன்றே ஆரம்ப நாள், ஆகவே சிறிதாக ஆரம்பியுங்கள். தேவன் அதைப் பெருகச் செய்வார்.

ஜெபம்:

வழிநடத்தும் வல்ல தேவனே, என் வாழ்வில் தெய்வீக சுபாவங்கள் பெருகும்படிக்கு, ஒவ்வொரு நாளும் சிறிதான மாற்றங்கள் உண்டாகும்படிக்கு என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 4:16